பொதுச்செயலாளர் கடிதம்

இடைநிலை மாநில பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் .                                                                                                                                                  

பேரன்புமிக்க, மாநிலப்  பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு, எனது அன்பான வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


உலகில் மிக உயர்ந்த பதவியாகிய ஆசிரியர் பணியினை ஏற்று  எதிர்கால தேசத்தைச் சீர்படுத்தும்  அரிய  பணியை ஆற்றுபவர்கள்  நாம் என்பதில் பெரு மகிழ்ச்சி கொள்வோம்.
 முன்னால் ஜனாதிபதியும் ,இந்நாள்  பிரதமமந்திரியும்    " நாங்கள் ஆசிரியர்களாக இருப்பதில்தான் மகிழ்ச்சி  கொள்கிறோம் " என்று, நம் பணியை பெருமைப்படுத்துகின்றனர்.

நாமும், இந்த உயரிய பணியை ஏற்று  மூன்று  ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிவிட்டாலும் ,  நமக்கு சில குறைகள் உண்டு .நாம் பணியேற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் மாவட்ட பணி   மாறுதல் இன்றி அவதியுறுவது  நாம் அனைவரும் அறிந்ததே, நம்மில் சிலர் இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன்  "மாவட்ட மாறுதல் உண்டு "என்றார்கள் ,ஆனால், கிடைக்கவில்லை.தற்போது, அரசு உயர் அதிகாரிகளும் ,"5 ஆண்டுகள் முடிந்தவுடன், பணிமாறுதல் உண்டு "என்று கூறி, பிரச்சனைகளிலிருந்து  தப்பித்துக்  கொள்கிறார்கள் . 
 நமது  பணி  நியமன வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் இடைக்காலத்  தீர்ப்பின் படி நாம்  பணிநியமனம் பெற்றுள்ளோம். அந்த இடைக்கால தீர்ப்பில் உள்ள தடையாணை நீங்கும் வரை எத்தனை,எத்தனைஆண்டுகள் ஆனாலும், மாவட்ட பணி மாறுதல் பெற முடியாது.இதை நீங்களே விபரம் அறிந்த வழக்கு  றிகர்களிடம் தெளிவுபெற்றுகொள்ளுங்கள் .இந்த நாள் வரை  எந்த ஒரு பெரிய ஆசிரிய இயக்கங்களும் நமக்காக குரல் கொடுக்க முன் வரவில்லை. .அதற்காக நமது பிரச்சனைகளை நாமே முன்னின்று தீர்த்துக்கொள்ள உருவானதுதான் நம் இயக்கம் (SSTA). 

மூன்று ஆண்டுகாலம் நம் குடும்பத்தை பிரிந்ததால், நாம் அனுபவிக்கும் துன்பத்தை வார்த்தைகளால் எழுத முடியாது. ஒவ்வொரு மகிழ்ச்சியான  நேரத்திலும் , துன்பமான நேரத்திலும்  நம் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை. அதை  அனுபவிக்கும் நமக்குத்தான் அந்த வேதனை புரியும் .வேடிக்கை பார்பவர்களுக்கு அது ஒரு  கேலியாகவும் ,செய்தியாகவும்தான்   தெரியும்.நம்  உயிரிலும் மேலான நம் வயதான பெற்றோர்கள் ,கணவன் ,மனைவி மற்றும் குழந்தைகள் என, நாம் உடனிருந்து பாதுகாக்கவேண்டிய அத்துணை சொந்தங்களையும்  பிரிந்து பல நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால், சரவர உணவு கூட  இன்றி பணியாற்றி வருகிறோம் .இந்த பணிக்காலத்தில் நம்மில் சில ஆசிரியர்களின் கணவரையும் ,குழந்தைகளையும் ,பெற்றோர்களையும் உடன் இருந்து கவனிக்க முடியாமல் ,அவர்களை  இழந்துவிட்டனர் .
இந்த நிலை இன்னும் தொடர்ந்தால் நாம் இழக்க போவது எத்தனையோ?அதை நினைத்தால்  மனம் கனத்துப்போகிறது.  இந்த வருடமும் நாம் கனத்த இதயத்துடன் மீண்டும் நமது பணியை  ஏற்றுள்ளோம்.     இன்னும் எழுதினால் நம் எழுதுகோலும் நம் வேதனை கண்டு கண்ணீர் சிந்தும் !!!!!!!!!.

 இத்தனை துன்பவேலையிலும், நம் ஆசிரியர்களின் அறியாமையைப்  பயன்படுத்தி சிலர் அதை செய்வோம், "இதை செய்வோம் "என்று இதுவரையில் எதையும் செய்யவில்லை .இது அவர்கள் தவறல்ல ,நம் தவறுதான்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

ஆகவேதான் , நமது  SSTA  இயக்கம் சார்பில் நமது மாவட்ட பணிமாறுதல் உரிமையை  வலியுறுத்தி ஒரு வழக்கும்,நம்மில் ஊனமுற்ற குழந்தைகளை உடைய  ஆசிரியர்களைக் கொண்டு கருணை அடிப்படையில்  ஒரு வழக்கும் என இரண்டு வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளோம்.இன்னும் பணிமாறுதலைப்  பற்றி விளக்குவோமானால், பல மணி நேரம்  தேவை என்பது உண்மை.

இந்த வேதனைகளுக்கெல்லாம்   விளக்கு வைதார்ப்போல், நமக்கு மிகப் பெரிய  ஊதிய முரண்பாட்டை ஏற்படுத்தியது கடந்த அரசு,இது அறியாமலோ ,தெரியாமலோ நடந்தது அல்ல ,திட்டமிட்டு தெரிந்தே அரங்கேறியது . பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய குழுவின் பரிந்துரையால் அரசு ஊழியர்களின் ஊதியத்தை கூட்டுவது நியாயமா ? அல்லது கொடுத்த ஊதியத்தை குறைப்பது நியாயமா ? ஒரு இடைநிலை ஆசிரியர் பதவிக்கு எந்த ஒரு பதவி  இறக்கமோ,தகுதி இறக்கமோ செய்யாமல்,அடிப்படை ஊதியத்தை குறைத்தது முன்னாள் அரசு. 

31 .05 .2009 அன்று இடைநிலை ஆசிரியர் ,பதவிக்கு வழங்கப்பட்ட ஊதியம் 4500 +2250 +4320 (64 %DA ).இது மூன்றையும் சேர்த்து  அடிப்படை ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்று ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையான அரசாணை எண்: 234ல் கூறப்பட்டுள்ளது.அவ்வாறு வழங்கி இருந்தால் ,நமக்கு அடிப்படை ஊதியம் ரூ .11070 வழங்கி இருக்கவேண்டும் .ஆனால் வழங்கியது ,ரூ 8000 மட்டுமே' மேலும்" சம வேலைக்கு சம ஊதியம்"என்பதுதானே,நியதி.ஆனால் ,31 .05 .2009 முன் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும் ,பின்னர் நியமனம்   பெற்ற நமக்கு  மிகக் குறைவான  ஊதியத்தை   வழங்கிவருகின்றனர்  .அவ்வாறு கணக்கிட்டால் ,ஒவ்வொரு  மாதமும் ரூ .6200 க்கு மேல்  குறைவாகப்   பெற்று வருகிறோம் .இவ்வாறு பணி மாறுதலும் இன்றி ,குறைவான ஊதியத்துடன் மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டோம் .

இந்த துயரத்தின் வெளிப்பாடாக ,நம் இயக்கம் துவங்கிய மூன்றே மாதத்தில் சுமார்  500 க்கும்  அதிகமான உறுப்பினர்களைப்  பெற்றுள்ளோம்.ஆனாலும் நமது மாநில பதிவு மூப்பு ஆசிரியர்கள் சுமார் 7000  பேர் தமிழகத்தில் நியமனம் பெற்றுள்ளோம்.ஆனால் நம் இயக்கத்தில் இணைந்துள்ளது 500 நபர்கள்தான் . நம்போல் நியமனம்பெற்ற அத்தனைபேரும் இணைந்தால்தான்  நம் கோரிக்கைகளை வெல்லமுடியும் .நமது கோரிக்கைகளுக்காக வேறு யாராவது  போராடுவார்கள் என்று   நம்மைப் போல் நியமனம் பெற்ற ஆசிரியர்கள்  தொலைவிலிருந்து   வேடிக்கை பார்த்தால் .ஊதியமும் ,பணி மாறுதலும் ,கானல் நீராகவே போய்விடும்.

 
ஆம் நண்பர்களே ,இயக்கத்திற்காக தோல் கொடுங்கள்,நம் இயக்கத்தின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு தாருங்கள் .நாம்தான் நமது கோரிக்கைகளுக்காகப் போராடவேண்டும் .
நமது கோரிக்கைகள் வெல்லும்வரை தொடர்ந்து போராடுவோம்.!!!!!  .இயக்கங்கள் என்பது நம் உரிமைகளையும் ,சலுகைகளையும் பெற்று தருவற்க்காகதான்.நீங்கள் கரங்களைக் கொடுத்தால் நிச்சயமாக வரும் கல்வி ஆண்டுக்குள்ளாகவே  ,நமது ஊதியத்தையும் ,பணி மாறுதலையும் உறுதியாக பெறுவோம் . 


அதுவரை ,நம்மைத்தவிர  வேறு நியமன ஆசிரியர்களை நம் இயக்கத்தில் இணைக்கமாட்டோம் என்று உறுதி கூறுகிறோம் .
நமது கோரிக்கைகளுக்காக மட்டும் போராட உதித்த இயக்கம் நம் இயக்கம் !!!! 

போராட்டத்தில் குதித்த இயக்கமும்  நம் இயக்கம்!!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...