1 முதல் 5ம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்கு புத்தகங்கள் வினியோகம்

தமிழக பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ முறை இந்த ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புத்தக எடை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பருவத்துக்கு
ஏற்ப பாடங்களை தொகுத்து ஒரே புத்தகமாக வழங்கப்பட்டது. முதல் பருவத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு புத்தகமாகவும், 6, 7, 8 வகுப்புகளுக்கு மொழி பாடங்கள், இதர பாடங்களுக்கு என தனித்தனியே 2 புத்தகங்கள் வழங்கப்பட்டது. தற்போது 2-ம் பருவத்துக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை செப்டம்பரிலேயே பள்ளிகளுக்கு வினியோகித்து வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

1 முதல் 5-ம் வகுப்பு வரை முதல் பருவத்தில் ஒரு புத்தகமாக வழங்கப்பட்டதை மாற்றி, 2வது பருவத்தில் மொழி பாடத்துக்கு ஒன்றும் கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்துக்கு ஒன்றுமாக 2 புத்தகம் வழங்கப்பட உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...