பிரெஞ்சுப் புரட்சி-தமிழ் கட்டுரை

CLICK HERE TO DOWNLOAD&PRINT
பிரெஞ்சுப் புரட்சி (French Revolution, பிரெஞ்சு: Révolution française; 1789–1799) பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாக பிரான்சில் பல நூற்றாண்டுகளாக
நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் (inalienable rights) போன்றவை பரவின. பிரான்சின் இடது சாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும் இம்மாற்றங்களுக்கு காரணமாக இருந்தனர்.
1789 இல் பிரெஞ்சு பாராளுமன்றம் கூட்டப்பட்டதுடன் பிரெஞ்சு புரட்சி துவங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் மன்னராட்சியின் வலது சாரி ஆதரவாளர்கள், மிதவாதிகள், இடது சாரி தீவிரவாதிகள், பிற ஐரோப்பிய நாடுகள் ஆகியோருக்கிடையே பிரான்சின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் பலப்பரீட்சை நடந்தது. பெரும் வன்முறைச் செயல்கள், படுகொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் என பிரான்சில் பெரும் குழப்பம் நிலவியது. செப்டம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லோட்டின் தலைவெட்டு எந்திரம் மூலம் கொல்லப்பட்டனர். குடியரசின் புதிய ஆட்சியாளர்களுக்கிடையே அதிகாரப் போட்டிகள் மிகுந்து பிரான்சு 1793 இல் மேக்சிமிலியன் ரோபெஸ்பியரின் சர்வாதிகாரப் பிடியில் சிக்கியது. 1794இல் ரோபெஸ்பியர் கொல்லப்பட்ட பின் அவரது “பயங்கர ஆட்சி” (reign of terror) முடிவுக்கு வந்தது. பின் 1799 வரை டைரக்டரேட் என்ற அமைப்பு பிரான்சை ஆண்டது. அதற்குப் பின் நெப்போலியன் பொனபார்ட் ஆட்சியைக் கைப்பற்றி சில ஆண்டுகளில் தன்னைத் தானே பிரான்சின் பெரரசராக அறிவித்துக் கொண்டார்.
நவீன வரலாற்று யுகத்தின் வளர்ச்சியில் பிரெஞ்சுப் புரட்சியின் பங்கு பெரியது. குடியரசு ஆட்சிமுறை, புதிய அரசியல் கொள்கைகள், தாராண்மிய மக்களாட்சி முறை, மதச்சார்பின்மை, ஒட்டுமொத்தப் போர்முறை ஆகியவை பிரெஞ்சு புரட்சியால் உருவாகி வளர்ச்சி பெற்ற விசயங்களுள் அடங்கும். 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலும் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கங்கள் காணக்கிடைக்கின்றன.

பாஸ்டில் சிறையுடைப்பு, ஜூலை 14 1789

புரட்சிக்கான காரணங்கள்

  • பிரான்சின் வல்லாட்சி அரசு, பதினைந்தாம் லூயி, பதினாறாம் லூயி ஆகிய மன்னர்கள் காலத்தில் வலிமையற்று செல்வாக்கிழந்தது. மன்னர் பதினைந்தாம் லூயி பல போர்களைச் சந்தித்து அதன் காரணமாக நாடு பொருளாதாரத்தில் மிக மந்தமான நிலையில் காணப்பட்டது. அதன் பின்னர் நாட்டை ஆண்ட பதினாறாம் லூயி அமெரிக்கப் புரட்சியின் போது குடியேற்றவாதிகளை ஆதரித்து போரில் ஈடுபட்டார்.
  • மேரி அண்டொனட்அரசி நிர்வாக விசயங்களில் முறைகேடாகத் தலையிட்டு வந்ததால் குழப்பங்களும், சீர்குலைவும் ஏற்பட்டன. பதினாறாம் லூயியின் மோசமான ஆட்சியினால் நாட்டில் வறுமையும் பல்வேறான சமூகச் சீர்கேடுகளும் பரவியிருந்தன்.
  • மன்னர்கள் உறுதியும் திறமையும் அற்றவர்களாகவும் ஆடம்பரத்தில் மூழ்கியவர்களாகவும் இருந்தனர். அரசின் வருவாயின் பெரும்பகுதி அரண்மனை ஆடம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டது.
  • பிரபுக்களும் பிறவகைப்பட்ட உயர்குடி மக்களும், குறிப்பாக மன்னனும் அரசி மேரி அண்டொனெட்டும், செல்வத்தில் திளைத்தனர்.நாட்டின் கடன் கிட்டத்தட்ட 2 பில்லியன் லிவேர்ஸ் ஆகியிருந்தது.
  • அமைச்சர்களும் அதிகாரிகளும் ஊழல் மிகுந்தவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும் இருந்தனர். நிர்வாகச் சீர்கேடுகளால் நாடு பெரும் பாதிப்பிற்குள்ளானது.
  • பாரிசின் 600,000 மக்களில் கிட்டத்தட்ட 150,000 பேர் வேலையற்றிருந்தனர்.
  • ஜூலை 11, 1789 இல் மன்னன் நாட்டின் மக்கள் பிரதிநிதியான முதலமைச்சர் ஜாக் நெக்கர் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றினான். இது மக்களைக் கோபத்துக்குள்ளாக்கியது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...