நரம்புத் தொகுதி-கட்டுரை

CLICK HERE TO DOWNLOAD




Nervous system
TE-Nervous system diagram.svg
The Human Nervous System.
இலத்தீன் systema nervosum
நரம்புத் தொகுதி என்பது,
ஒரு குறிப்பிட்ட விலங்கின் சூழலைப் பற்றியும் அவ்விலங்கைப்
பற்றியுமான தகவல்களைக் கடத்துவதற்கான சிறப்பாக்கம் கொண்ட நரம்புக் கலங்கள் எனப்படும் கலங்களின் ஒரு வலையமைப்பு ஆகும். இத் தொகுதியே உயிரினங்களின் உடற்செயல்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துவதாகும், உடலின் பல பகுதிகளிலும் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை கடத்துவதாகவும் இருக்கின்றது. இந் நரம்புத் தொகுதியானது தகவல்களின் மீது வினையாற்றி உடலின் பிற பகுதிகளில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நரம்புக் கலங்கள் (அல்லது நரம்பணுக்கள்), முக்கியமாக இரு வகையான கலங்களைக் கொண்டன. நியூரோன்கள் (Neuron) மற்றும் இவற்றின் செயற்பாட்டுக்கு உதவும் பிற சிறப்புக் கலங்களான நரம்புக்கட்டிகள் (glia) ஆகியனவே நரம்புத் தொகுதியில் காணப்படும். நியூரோன்கள் கூட்டமாக இணைந்திருக்கையில் நரம்புக்கலத்திரள் (ganglia) என அழைக்கப்படும்.

நரம்புத் தொகுதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, மைய நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம், என்பனவாகும். நரம்புக் கலங்கள் இவ்விரு தொகுதிகளுக்கும் இடையேயும், அவற்றின் உள்ளேயும் கணத் தாக்கங்களை உருவாக்கிச் செயற்படுத்துகின்றன. மூளை, முண்ணாண் (spinal cord), என்பன முதுகெலும்பிகளின் மைய நரம்பு மண்டலத்தின் பகுதிகள். நரம்பு நாண் (nerve cord) என்பது முதுகெலும்பிலிகள், முதுகுநாணிகளில் காணப்படும், முதுகெலும்பிகளின் மையநரம்புத் தொகுதிக்கு ஒப்பான பகுதியாகும். புற நரம்பு மண்டலமானது உணர் நரம்புக் கலங்களையும், அவற்றை மையநரம்புத் தொகுதியுடன் இணைக்கும் நரம்புக் கலங்களையும் கொண்டது. தூண்டல்களுக்கு மறுவினையாக உணர் நரம்புக் கலங்கள், சமிக்ஞைகளை உருவாக்கி, மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது. மைய நரம்பு மண்டலமானது இச் சமிக்ஞகளின் மீது தொழிற்பட்டு உரிய சமிக்ஞைகளைத் தசைநார்களுக்கும், சுரப்பிகளுக்கும் அனுப்புகின்றது. விலங்குகளில் காணப்படும் நரம்புத் தொகுதியின் நரம்புக் கலங்கள், சிக்கலான ஒழுங்கமைப்பில் ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளன. இவை மின்வேதிச் சமிக்ஞைகளையும், உணர்வுக் கடத்திக் கலங்களையும் பயன்படுத்திக் கணத்தாக்குகளை ஒரு நரம்புக்கலத்திலிருந்து அடுத்த நரம்புக் கலத்துக்குக் கடத்துகின்றன. வேறுவேறான நரம்புக் கலங்களுக்கு இடையிலான இடைவினைகள், நரம்புச் சுற்றுக்களை உருவாக்கி, உயிரினத்தின் உலகம் பற்றிய நோக்கையும், அதன் உடலுக்குள்ளேயே நடை பெறுவனவற்றையும் ஒழுங்குபடுத்துவதன் மூலம், அவ்வுயிரினத்தின் நடத்தைகளையும் முறைப்படுத்துகின்றது. பல பல்கல உயிரினங்களில் நரம்புத் தொகுதிகள் காணப்பட்டாலும், அவை சிக்கல்தன்மையில் பெரும் வேறுபாடுகளைக் கொண்டவையாக உள்ளன.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...