தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் ஆசிரியர் பணி கிடைக்குமா? : இரட்டைப் பட்டம் (Double Degree) படித்தவர்கள் கலக்கம்

இரட்டைப் பட்டம் (Double Degree) பெற்றவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் பணி கிடைக்குமா என்று பட்டதாரிகள் கலக்கத்தில் உள்ளனர். இரட்டைப் பட்டம் (Double Degree)  படித்தவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த
உயர் நீதிமன்றம், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பே முறையானது. அந்த முறையில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் பெறும் தகுதி உள்ளது.

மேலும், டபுள் டிகிரி படித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது, பணிநியமனமும் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இதற்கிடையே 25ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, ‘மீண்டும் தகுதித் தேர்வு அக்டோபர் மாதம் 3ந் தேதி  நடக்கும்‘ என்று தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் பலர் ‘டபுள் டிகிரி‘ முடித்துள்ளனர். அவர்கள் அக்டோபர் மாதம் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், அவர்களுக்கு ஆசிரியர் வேலை கிடைக்குமா என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கவில்லை. உயர் நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பின்படி டபுள் டிகிரி படித்தவர்கள் ஆசிரியர் பணியை பெற முடியாது. இதனால் டபுள் டிகிரி படித்தவர்கள் மேலும் கலக்கம் அடைந்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...