ஜே.ஏ.எம். தேர்வுக்கு செப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்

 ஜே.ஏ.எம். எனப்படும் எம்எஸ்சி படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு, 2013ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல்
கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டு M.Sc படிப்பு, ஒருங்கிணைந்த M.Sc - Ph.D படிப்பு, M.Sc - Ph.D இரட்டை பட்டங்கள் ஆகியவற்றில் சேர JAM நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பெங்களூரில் உள்ள Indian Institute Of Science அல்லது மும்பை, டெல்லி, கான்ப்பூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பயில வாய்ப்புக் கிடைக்கும்.
இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் கிடைக்கும். http://gate.iitd.ac.in/jam/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் உள்ளிட்ட விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...