தரமான கல்வி வேண்டும்: சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்


என்ன விலை கொடுத்தாவது குழந்தைகளுக்கு தரமான கல்வியை , தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் கட்டாயம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான
உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில் தான் உள்ளது. புதிய அறிவு தேடலும், ஒழுக்கமும் உள்ளது தரமான சிறந்த கல்வியில் தான் எனவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எப். எம். இப்ராஹிம் ஆகியோர் வெளியிட்டிருப்பதாவது: தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தகுந்தாற் போன்று தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை நியமிப்பதில் அரசு முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த வகையில் அரசு என்ன விலை கொடுத்தாவது தரமான கல்வியை அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில் தான் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...