தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பளம் உயர்வு


எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகத்தின் கீழ், பணியாற்றி வரும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு, 15 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், 5,000 ஊழியர், தொகுப்பூதிய
அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும், 1,500 ஊழியர்களுக்கு, 15 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள, 3,500 ஊழியர், பணியில் சேர்ந்து, சில ஆண்டுகளே ஆவதால், அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப் படவில்லை. 1,500 பேருக்கு, சம்பள உயர்வு வழங்கிய தமிழக அரசுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கக பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலர் கபிலன், நன்றி தெரிவித்துள்ளார். தொகுப்பூதிய ஊழியர்களை, பணிவரன் முறை செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...