27ம் தேதி பக்ரீத் பண்டிகை தமிழக தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்

முஸ்லிம்கள் வரும் 27ம் தேதி ஹஜ் பெருநாளை( பக்ரீதம் பண்டிகை) கொண்டாடுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் செய்யது அலி அறிக்கையில்
கூறியிருப்பதாவது; தமிழக முஸ்லிம்கள் 27ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ளனர். கடந்த 17ம் தேதி துல்ஹஜ் பிறை1 என்பதால், 26ம் தேதி முஸ்லிம்கள் அனைவரும் அரபா நோன்பு நோற்க வேண்டும். 27ம் தேதி ஹஜ் பெருநாளை (பக்ரீத் பண்டிகை) கொண்டாட வேண்டும். மேலும் பக்ரீத் தொழுகைக்கு பின் முஸ்லிம்கள் தங்களது குர்பானி பிராணிகளை அறுத்து அதை ஏழை மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட செயலாளர் செய்யது அலி அறிக்கையில் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...