சத்துணவு கூடங்கள், அங்கன்வாடிகளுக்கு தேர்வு செய்த 29,000 ஊழியர்கள் நியமனம் ரத்து


சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வுக்கு புதிய விதிமுறையை வகுத்து, அதன்படி மாநிலம் முழுவதும் 2 மாதத்தில் புதிய பணியாளர்களை தேர்வு செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 28 ஆயிரத்து 596 பணியாளர்களின் நியமனம் ரத்தாகிறது.

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலையில் 16,056 சத்துணவு அமைப்பாளர்கள், சமையலாளர் மற்றும் உதவி சமையலாளர்களும், 1009 அங்கன்வாடி பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தை எதிர்த்து மதுரை பேரையூரை சேர்ந்த முத்துலெட்சுமி உட்பட 30 பேர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் விதிமீறல்கள் நடந்துள்ளன. எனவே, அந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனுக்களை நீதிபதி வினோத்குமார் சர்மா விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

சத்துணவு மையத்திலிருந்து 5 முதல் 10 கி.மீ. தூரத்திற்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விதிமுறை முறையாக பின்பற்றப்படவில்லை. சிலருக்கு நேர்முகத் தேர்வு அழைப்பு அனுப்பவில்லை. சிலர் விண்ணப்பங்களை நிராகரித்ததற்கு உரிய காரணம் தெரிவிக்கவில்லை. சிலர் தேர்வு செய்யப்பட்டும் பணி நியமன உத்தரவு வழங்கவில்லை என பல்வேறு புகார்களை மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் பணி நிரந்தர பணியாகும். இப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு, இதுவரை 7 அரசாணைகளை பிறப்பித்துள்ளது. பெண்கள், சிறுபான்மையினர், ஊனமுற் றோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு இப்பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க தனி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாணை யில், இப்பணிகளுக்கு கிராமங்களில் வசிப்பவர் களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்பது சரியல்ல. அது பிற இடங்களில் வசிப்பவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். அதே போல், எல்லா வகுப்பினரும் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மையம் அமைந்திருக்கும் 5 கி.மீ. தூரத்திற்குள் வசிப்பவர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்ற விதி செல்லாது. வசிக்கும் இடத்தின் அடிப்படை யில் ஒருவருக்கு வேலை மறுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.

எனவே, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்ய, அரசு அனைத்து அரசாணைகளையும், வழிகாட்டுதல்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். காலியிடங்கள், இடஒதுக்கீடு, தகுதிகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். மாவட்ட அளவில் தகுதியானவர்களிடம் விண்ணப்பம் பெற வேண்டும். அவற்றை இடஒதுக்கீடு அடிப்படையில் தனியாக பிரிக்க வேண்டும். மாவட்ட அளவில் தேர்வு குழு உருவாக்கி, விண்ணப்பித்தவர்களில் யாருக்கு அதிக தகுதி உள்ளதோ, அவரை இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு கிராமத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதியான நபர்கள் இருந்தால், கூடுதல் நபரை அடுத்த கிராமத்தில்  நியமிக்கலாம். இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் முடிவெடுக்கலாம். இந்த வழிமுறைகள் அடிப்படையில் மாநிலத்தில் 2 மாதத்தில் சத்துணவு, அங்கான்வாடி பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே நடந்த தேர்வு ரத்து: மனுதாரரின் வக்கீல் வெங்கடேஷ் கூறுகையில், Ôஐகோர்ட் தீர்ப்பின் மூலம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 28 ஆயிரத்து 596 சத்துணவுப் பணியாளர்களின் தேர்வு ரத்தாகிறதுÕ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...