நவ.,3ல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு கட்டுரை போட்டி

: "நூலக வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வரும், 3ம் தேதி, கட்டுரைப் போட்டி நடக்க உள்ளது' என, மாவட்ட நூலக அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட மைய நூலகம், மைய நூலக
வாசகர் வட்டம் சார்பில், நவம்பர், 14ம் தேதி முதல், 20ம் தேதி வரை, 45வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியரிடையே நூலகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில், கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டி, "நூலகம் ஓர் அறிவின் ஆலயம்' என்ற தலைப்பிலும், மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணியருக்கு, "நூல்கள் உங்கள் நண்பன்' எனும் தலைப்பிலும், உயர்நிலை, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, "நாளும் நூலகம் செல்வோம்' எனும் தலைப்பிலும் நடத்தப்பட உள்ளது.

போட்டிகள், வரும், 3ம் தேதி காலை, 10 மணி முதல், மதியம், 12 மணி வரை, மாவட்ட மைய நூலகம் எதிரே, கவின் கி÷ஷார் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட அளவில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள், நவம்பர், 20ம் தேதி நடக்கும் தேசிய நூலக வார விழா நிறைவு தினத்தன்று வழங்கப்படும்.மாணவ, மாணவியர் கட்டுரைப் போட்டியில், ஆறு பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். கட்டுரைப் போட்டிக்கு தேவையான வெள்ளை பேப்பர்கள், போட்டியாளர்கள் கொண்டுவர வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், அவர்களது விவரம் குறித்து, 04286 - 228475, 232005 என்ற எண்ணில் நவம்பர், 2ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...