மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை அறிய இணையதளம்

மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கான உரிமைகள், சட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கு, மாத இதழும், இணையதளமும் வெளிவர இருக்கின்றன. தமிழ்நாடு
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், "ஊனமுற்றோர் உரிமைக்குரல்' மாத இதழ், வெளிவர இருக்கிறது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள், சட்டங்கள், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான அரசாணைகள், போன்றவற்றை அறிய முடியும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய, பல்வேறு தகவல்கள், படிவங்கள், ஆணைகள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில், தமிழ் இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. மாத இதழ் வெளியீட்டு விழா, மற்றும் இணையதள துவக்கவிழா, கவர்னர் மாளிகையில் உள்ள, அன்னபூரணா அரங்கில், இன்று காலை நடக்க உள்ளது.




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...