மூடுவிழா காணும் அரசு தொடக்கப் பள்ளிகள்!

தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால், திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
 தாராபுரம், மூலனூர் மற்றும் குண்டடம் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகக் குறைவாக உள்ளது.
 குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வானவராயநல்லூர் தொடக்கப் பள்ளியில் 5 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். புங்கந்துறையில் 7 மாணவர்களும், பெருமாள்வலசு பள்ளியில் 5 மாணவர்களும் மட்டுமே படித்து வருகின்றனர். இப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணியாற்றி வருகின்றனர்.
 மாணவர் சேர்க்கை குறைவாக இருந்ததைக் காரணம் காட்டி, நடப்புக் கல்வியாண்டில் குண்டடம் ஒன்றியம், சிறுகிணறு தொடக்கப்பள்ளி மூடப்பட்டுவிட்டது. வரும் கல்வியாண்டில் காசிபாளையம், பழையநவக்கொம்பு, வானவராயநல்லூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளை மூடிவிட அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 இது குறித்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் என். பாலதண்டபாணி கூறியது: தனியார் பள்ளிகள் மீதான மோகம் அதிகரிப்பதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையக் காரணம். தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், அரசுப் பள்ளிகளைப் பற்றிய தவறான எண்ணம் பரவியிருப்பது உள்ளிட்ட காரணங்களால், மக்கள் மத்தியில் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது என்றார்.
 மேலும், பெரும்பாலான அரசு ஆரம்பப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருக்கின்றன. அந்த ஆசிரியர் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆசிரியர் வரவழைக்கப்படுகிறார். இது கல்வித் தரத்தை பாதிக்கச் செய்கிறது. மாணவர்கள் வருகையும் குறைந்து வருகிறது என்றார்.
 இது குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலக வட்டாரத்தில் கூறியது: குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. நன்கொடை கொடுத்தாவது, சகல வசதிகளுடன் இயங்கும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடம் மேலோங்கிவிட்டது.
 இதனால், அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துவிட்டது. 5 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளை மூட வேண்டும் என உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், பள்ளிகளை மூட வேண்டியது கட்டாயமாகி விட்டது. பிற்காலத்தில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்தால், மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்கத் தடை ஏதுமில்லை என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...