வர்த்தக காரணங்களுக்கு பள்ளி நிலம் பயன்படுத்த தடை கோரி மனு-

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, வணிக நோக்கத்துக்காக மாற்றுவதற்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சாலிகிராமத்தைச் சேர்ந்த, குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சாலிகிராமத்தில், பள்ளி ஒன்றை துவங்குவதற்காக, 3.59 ஏக்கர் நிலத்தை, 1953ல், அரசு ஒதுக்கியது. பள்ளி தவிர, வேறு நோக்கத்திற்காக, இந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது. அதன்படி, 1956ல், ஜெனரல் கரியப்பா பெயரில், கில்டு ஆப் சர்வீஸ், பள்ளியை துவக்கியது.
பின்னர், 1968ல், 2.94 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், ஆரம்பப் பள்ளி துவங்கப்பட்டது. காலி இடத்தை, விளையாட்டு மைதானமாக, மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்தில்,
தொழிற் பயிற்சி மையம் நடத்த, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் கோரி, பள்ளி கல்வி இயக்குனரிடம், கில்டு ஆப் சர்வீஸ் தலைவர் அனுமதி கேட்டார்; அது, நிராகரிக்கப்பட்டது.
காலியிடத்தை, மாணவர்களின் நலன்களுக்கு எதிராக பயன்படுத்த, முயற்சிகள் நடக்கிறது. எனவே, பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, தொழில் பயிற்சி வகுப்புகள் அல்லது வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தக் கூடாது என, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்&' அரசுக்கு, "நோட்டீஸ்&' அனுப்ப உத்தரவிட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...