அண்ணா பல்கலை ஆசிரியப் பணியில் முதுநிலைப் பட்டதாரிகள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க, முதுநிலை பொறியியல் படிப்பை முடித்த 150 பட்டதாரிகளை ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர், தங்களின் பணி காலத்திலேயே, பி.எச்டி படிப்பை
முடிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.
எம்.இ/எம்.டெக் முடித்த நபர்கள், ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும், 1:5 என்ற விகிதத்தில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இந்த ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள், வருடத்திற்கு ஒருமுறை, தங்களின் ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
ஆசிரியப் பணியின்போதே, தங்களின் முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் இவர்கள் மேற்கொள்ளலாம். இதன்மூலம், அவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்படும். வெற்றிகரமாக முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தவர்கள், அண்ணா பல்கலையிலோ அல்லது வேறு பொறியியல் கல்லூரியிலோ பணியமர்த்தப்படுவார்கள். AICTE, தனது அறிவிப்பில், ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:15 என்ற அளவில் இருக்க வேண்டுமென கூறியுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க, இளநிலைப் பொறியியல் பட்டதாரிகளை நியமிக்கலாம் என்றும், ஆனால் அவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்கள், 3 ஆண்டுகளுக்குள் முதுநிலைப் படிப்பை முடித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு AICTE அனுமதியளித்துள்ளது.
மேலும், பொறியியல் முதுநிலைப் படிப்புகளை மேற்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும்பொருட்டு, 2 காலஅளவுகளில்(2 shifts) அப்படிப்புகளை கல்வி நிறுவனங்கள் வழங்கவும் AICTE இசைவு தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...