கல்வி நிறுவனங்கள் நன்கொடை பெற்றால் நடவடிக்கை: தாக்கலாகிறது மசோதா

நேரடியாகவோ, மறைமுகமாகவோ கல்விநிறுவனங்கள் நன்கொடை பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் "பள்ளிகளில் நேர்மையற்ற நடைமுறைகள் தடுப்பு
மசோதா-2012' விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்கான வரைவு மசோதா, நவம்பர் 1ஆம் தேதி, மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் முன் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த வரைவு மசோதாவில், கல்வி நிறுவனங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நன்கொடைகளைப் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திலோ அல்லது குறிப்பிட்ட கடையிலோ புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி தொடர்பான பொருள்களை வாங்கும்படி வற்புறுத்தக்கூடாது.
கற்றல் திறன் குறைவாக உள்ள குழந்தைகள், எச்ஐவி/எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் உள்பட எந்தவொரு குழந்தையையும் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கக்கூடாது.
வகுப்பறையில் மாணவர்களுக்கு உடல்ரீதியான தண்டனை அளிக்கும் ஆசிரியர்களுக்கு அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வகுப்பு நேரம் முடிவடைந்த பின்னர், பள்ளிக்கு உள்ளே அல்லது வெளியே தனிப்பயிற்சி வகுப்புகளில் சேரும்படி மாணவர்களை வற்புறுத்தக்கூடாது. தவறான தகவல்கள், விளம்பரங்கள் கொடுக்கும் பள்ளிகளுக்கு தண்டனை அளிக்கப்படும்.
விதிமுறைமீறி வசூலிக்கப்பட்ட நன்கொடைகளை, மாநில பள்ளிக்கல்வி தீர்ப்பாயம், தேசிய பள்ளிக்கல்வி தீர்ப்பாயங்களின் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்ய அரசுக்கு உரிமை உண்டு என்பன உள்ளிட்ட விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 6, 9, 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தவும் "பள்ளிகளில் நேர்மையற்ற நடைமுறைகள் தடுப்பு மசோதா-2012' பரிந்துரை செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...