பென்ஷனில் கை வைத்த உத்தரவு ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்


தலைமைப் பொறியாளராக பணியாற்றியவருக்கு, பென்ஷன் தொகையில், 15 சதவீதம் குறைப்பு செய்து, சென்னை துறைமுகத் தலைவர், பிறப்பித்த உத்தரவை, ஐகோர்ட் ரத்து செய்தது. சென்னை துறைமுகத்தில், தலைமைப் பொறியாளராக பணியாற்றியவர், செல்லதுரை. ஐகோர்ட்டில், இவர் தாக்கல் செய்த மனு: எனக்கு
எதிராக, மூன்று குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியலை, மத்திய கப்பல் துறை அமைச்சகத்தின், துறைமுகங்களுக்கான இணைச் செயலர், வழங்கினார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, விளக்கம் அளித்தேன். 2010ம் ஆண்டு, ஜூன் மாதம், ஓய்வு பெற்றேன். துறை ரீதியான விசாரணை நடந்தது. இதில், "என் மீதான குற்றச்சாட்டுக்கள், எதுவும் நிரூபிக்கப்படவில்லை' என, விசாரணை நடத்திய கமிஷனர், அறிக்கை அளித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், சென்னை துறைமுகத் தலைவர், ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், பென்ஷன் தொகையில், ஐந்து ஆண்டுகளுக்கு, 15 சதவீதம் குறைப்பு செய்வதாக, கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவைப் பிறப்பிக்க, துறைமுகத் தலைவருக்கு, அதிகார வரம்பில்லை. எனவே, அவரது உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜஸ்டின் ஆஜரானார். மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் மீதான குற்றச்சாட்டு, நிரூபணமாகவில்லை. துறையின் தலைவராக, செல்லதுரை இருந்துள்ளார். சென்னை துறைமுக ஊழியர்கள் விதிமுறைகளின்படி, குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு தான், இதற்கு பொறுப்பான அதிகாரி; துறைமுகத் தலைவர் அல்ல. குற்றப்பத்திரிகையை, துறைமுகத் தலைவர் வழங்கவில்லை. மத்திய அரசு தான், வழங்கியுள்ளது. பெரிய அளவில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தான், பென்ஷன் தொகையில் குறைப்பு செய்ய, துறைமுகத் தலைவருக்கு, அதிகாரம் வரும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, அவ்வாறு இல்லை. பணியில் இருக்கும் போது, ஒழுங்கீனமாக அல்லது அஜாக்கிரதையாக இருந்ததாக, எதுவும் நிரூபணமாகவில்லை. எனவே, பென்ஷன் தொகையில், 15 சதவீதம், துறைமுகத் தலைவர் குறைப்பு செய்தது, அவரது அதிகார வரம்பை மீறியது. துறைமுகத் தலைவரின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...