நூறு சதவீத கல்வியறிவு பெற்ற மகளிர் குழுக்கள் விண்ணப்பிக்க அழைப்பு


கல்வியறிவு அளிக்கும் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு, விருது வழங்கப்படும்,'' என, மகளிர் திட்ட அலுவலர் பிரபாகரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது, கிராம பகுதிகளில், மகளிர் குழுக்களில் உள்ள உறுப்பினர்களுக்கு 100 சதவீதம், கல்வி அறிவு பெற்றிட பாடுபடும் மகளிர் குழுக்களில், ஊராட்சி அள
வில் ஒரு குழுவிற்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற மகளிர் குழுக்களில், உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய விண்ணப்பங்களை சிவகங்கை, மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும். இதில், புதிதாக கல்வியறிவு பெற்ற உறுப்பினர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இவர்களை, வயதுவந்தோர் கல்வி அலுவலர் தேர்வு செய்து, சான்று வழங்குவார். இதில், தேர்ச்சிபெற்ற மகளிர் குழுக்களுக்கு கலெக்டர் சான்று வழங்குவார். இவற்றை, மாநில மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த விதிமுறைகள்படி தேர்வு செய்யப்படும். எனவே, இம்மாவட்டத்தில், 100 சதவீதம் கல்வியறிவுபெற்ற, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் குறித்த விபரங்களை, தயார்செய்து, சிவகங்கை, மகளிர் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...