ஆரோக்கியமான உணவுப்பழக்கம் - கோவை மாணவிகளின் முயற்சி!

தொடர்ந்து இயங்குவதே மனித வாழ்க்கையை முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும். உடல் மற்றும் மனம் ஆகிய இருபெரும் கூறுகளால் ஆனவன் மனிதன். உடல் பொதுவாக மனதின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்றாலும், அந்த உடல் இயங்குவதற்கான ஆற்றல் உணவின் மூலமே வழங்கப்படுகிறது. ஆனால் இன்றைய தாராளமய பொருளாதார உலகில், பல தவறான உணவுப் பழக்கங்களால், மனிதர்கள் பல நோய்களை சந்தித்து, செயல்திறனை
இழக்கின்றனர். குறிப்பாக, இளம்பருவ பள்ளி மாணவர்கள், முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதன்பொருட்டு, முறையான உணவுப்பழக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகியவை குறித்து, கோவையிலுள்ள PSGG கன்யா குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவிகள், எஸ்.அக்ஷயாஸ்ரீ, ஷாலினி, நிவேதா, நிவேகா மற்றும் ஸ்ருதி ஆகியோர் அடங்கிய குழு, அறிவியல் ஆசிரியை எஸ்.மாலதியின் வழிகாட்டுதலின்படி, பல பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 பள்ளி மாணவர்களிடம், மாறிவரும் இன்றைய சமூக சூழலில், அவர்களின் உணவுப் பழக்கம், பொருளாதார சூழல், பாரம்பரிய மற்றும் துரித உணவுப் பயன்பாடு, பாரம்பரிய உணவுப் பற்றிய விழிப்புணர்வு, அடிக்கடி ஏற்படும் உடல்நல குறைபாடுகள் குறித்த தகவல்களைப் பெற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு முடிவின்படி, மாணவர்கள், துரித உணவகங்களில் அதிகளவு உணவுகளை உண்கிறார்கள், வரகு, சாமை, திணை, ராகி போன்ற பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு இல்லை. முக்கிய உணவுகளான கீரை, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உண்பதில் ஆர்வமில்லை என்பன போன்ற பல அதிர்ச்சி உண்மைகள் தெரியவந்தன.
மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி, கலோரி மதிப்பீடு அடங்கிய Brochure, பாரம்பரிய உணவுகளை வலியுறுத்தும் Flex ஆகியவற்றை தயாரித்து, தாங்கள் ஆய்வு மேற்கொண்ட பள்ளிகளுக்கு இம்மாணவிகள் வழஙகியுள்ளனர்.
இவைத்தவிர, துரித உணவுகளுக்கு வரி விதித்தும், பாரம்பரிய உணவுகளுக்கு சலுகையளித்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.
அம்மாணவிகள் தயாரித்துள்ள Brochure மற்றும் Flex -களில் கீழ்கண்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளன.
* உடலுக்கு தீமை தரும், மாணவர்களை ஈர்க்கும் உணவுகள் பட்டியலும், அதேசமயம், உடலுக்கு பலவித நன்மைகள் செய்யும் பாரம்பரிய உணவுகள் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. மேலும், மேற்கூறிய உணவுகளை உண்ணும் அளவுகள் குறித்தும் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
* உணவுகளின் கலோரி அளவுகள் குறித்த தெளிவான விபரங்களும், உடற்பயிற்சியின் அவசியம், ஆற்றல் நிலைகள் மற்றும் முக்கியமான பொன்மொழிகளும், குறிப்பிட்ட வயதுக்கு தேவையான கலோரி அளவுகள் பற்றியும் பல்வேறுவிதமான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...