கடலில் பலியாகும் மீனவர்களின் குழந்தைகள் கல்வி செலவை அரசே ஏற்கும் புதிய திட்டம்


நாகர்கோவில்: கடலில் மாயமாகும், துப்பாக்கி சூட்டில் பலியாகும் மீனவர்கள் குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் வகையில் புதிய திட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக குமரி மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குனர் கூறினார். குமரி மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில்  நடைபெற்றது. கலெக்டர் நாகராஜன் தலைமை
வகித்தார். கூட்டத்தில் உதவி தொகை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது மீனவர்கள் பேசுகையில், ‘மீனவர்கள் நல வாரியம் மூலம் இதுவரை எங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை. முதியோர் உதவி தொகைகள் கூட கிடைக்காமல் பல விண்ணப்பங்களை கிடப் பில் போட்டு வைத்துள்ள னர். அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்துவதில்லை. யாரோ சொல்வதை கேட்டு, விண்ணப்பங்களை நிராகரிக்கிறார்கள். துறை ரீதியான கேள்விகளுக்கு அந்தந்த அதிகாரிகள் தான் பதில் அளிக்க வேண்டும்.

ஆனால் மீனவர் குறைதீர் கூட்டத்துக்கு அதிகாரிகளே வருவதில்லை. இருக்கைகள் பல காலியாக கிடக்கின்றன. எனவே அனைத்து துறை அதிகாரிகளும் மீனவர்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.கூட்டத்தில் பேசிய மீன் வளத்துறை உதவி இயக்குனர் ஐசக் ஜெயக்குமார், ‘கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் துப்பாக்கி சூட்டில் பலியாகும் மீனவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே நேரடியாக ஏற்று கொள்ளும் வகையில் புதிய திட்டம் கொண்டு வந்து, முதற்கட்டமாக இந்த திட்டத்துக்காக ரூ.25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 26ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அக்டோ பர் 19ம் தேதிதான் இதற்கான கடிதம் வந்துள்ளது. இதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் இன்னும் வரவில்லை. இருப்பினும் காணாமல் போன மீனவர்கள், துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர்களின் குழந்தைகள் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம். வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன் இதற்கான விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...