சங்கர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி


சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் கணபதிசுப்பிரமணியன் வரவேற்றார். கண்காட்சியை பள்ளியின் முன்னாள் மாணவரும், வேலாயுதம்பிள்ளை மருத்துவமனை இயக்குனருமான டாக்டர் அஜித், பார்வையிட்டு பாராட்டினார். கண்காட்சியில் இயற்பியல்
, வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், கணிதவியல் ஆகிய துறைகளை சார்ந்த இயங்கும், இயங்கா மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றன.

நடுவர்களாக பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ரெங்கநாதன், முதுநிலை உயிரியல் ஆசிரியர் உடையார், முதுநிலை இயற்பியல் ஆசிரியர் ருக்மணிதேவி, பட்டதாரி அறிவியல் ஆசிரியைகள் சண்முகசுந்தரி, அமுதவல்லி, முத்துமாரி செயல்பட்டனர். மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை பற்றி தலைமை ஆசிரியர் கணேசன், சிறப்பு அழைப்பாளர் டாக்டர் அஜித், அறிவியல் ஆசிரியர்கள் பாராட்டினர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் கல்வி மாவட்ட அறிவியல் கண்காட்சியில் இடம்பெறுவர்.
ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர், மாணவ, மாணவியர், அலுவலர்கள் செய்திருந்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...