SSTA- உடல்நலத்தகவல் -– உணவுப் பழக்கம்

நாம் வாழ்வதற்காக உணவு உன்ன வேண்டும். நிறைவான சமச்சீரான உணவு தான் உடல் பருமனையும், உடற்கட்டையும் நிர்ணயிக்கிறது.
சமச்சீரான உணவு என்பது போதுமான புரதம், மாவுச் சத்துக்கள் , கொழுப்புகள், தாதுப் பொருட்கள், வைட்டமின்கள்

அடங்கினதாக இருக்க வேண்டும்.
சமச்சீரான உணவுத் திட்டம் என்பது ஒருவர் செய்யும் வேலையைப் பொறுத்து அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உணவாக இருத்தல் அவசியம்.

கலோரிகளின் அளவு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடாது.இரண்டுமே தொந்தரவு தான். குறைவான கலோரிகளில் நிறைவான சத்துள்ள உணவாகத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். சமச்சீர் உணவுப் பட்டியலில் முதலிடம் புரதத்திற்கு தான். புரதம் நம் உடலின் திசுக்கள் அழியாமல் தடுக்கவும், அழிந்த திசுக்களைப் புதுப் பிக்கவும் உதவுகிறது. தவிர சருமம், கேசம், நகங்களின் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையானது புரதம். உடலின் வளர்ச்சிக்கும், சீரமைப்பிற்கும் காரணமாக இருப்பதும் புரதம் தான். புரதக் குறைவால் நமது சருமம் பளபளப்பை இழந்து, சுருங்கி விரைவில் முதுமையுறுகிறது. மாவுச்சத்து உடலைப் பருமனாக்குவதில்லை. மாவுச்சத்து உணவில் போதுமான அளவு இருந்தால் தான் உடல் சக்தியையும், வலிமையையும் பெற முடியும்.
* நமது உணவில் காய்கறிகளுக்கும், பழங்களுக்கும் முதன்மை அளிக்க வேண்டும். அப்போது தான் நமக்குத் தேவையான விட்டமின்களையும், தாதுக்களையும் நாம் பெற முடியும்.
* கீரை, வெள்ளரி, தக்காளி போன்றவற்றில் கால்சியம், வைட்டமின், போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் உள்ளது.
* நமது சருமத்திற்கு ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப் பழங்களை போதுமான அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறு தொடர்ந்து பருகி வர தோலிலும் கண்களிலும் பளபளப்பு கூடுகிறது.
* தினம் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிக்கும் ஆற்றல் தண்ணீருக்குத் தான் அதிகம் உள்ளது.
* பால் , முட்டை, காபேஜ் போன்றவற்றில் அயச்சத்து அடங்கியுள்ளது. அயச்சத்துக் குறைந்தால் சருமம் வெளிறிவிடும்.
*சர்க்கரை, ஐஸ்கிரீம், சாக்லேட், கேக் போன்றவற்றைக் கூடுமான வரை தவிர்க்கலாம். பதிலாக தேனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* பருமனைக் குறைப்பதற்காக பட்டினி இருப்பது அபாயகரமானதாகும். எடைக் குறைப்பிற்காக இப்படி இருந்தால் உடல் வலுவிழுந்து சோர்வடைந்து விடும்.
விருந்துகளையும், மதுபான வகைகளையும் குறைத்துக் கொள்ளலாம்.
பசித்த பிறகே சாப்பிடுவது என்ற நல்ல பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். குறைந்த அளவு உணவை நன்றாக மென்று விழுங்கினால் பூரணமாக சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.
இரத்த அழுத்தத்திற்குக் காரணமாக இருப்பது உப்பு. உப்பைத் தேவைக்கும் சிறிது குறைவாகவே சேர்த்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்துள்ளப் பொருட்களை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச் சத்துக் குறைவால் மாரடைப்பு, புற்று நோய், மலச்சிக்கல் உருவாகிறது.
நார்ச்சத்துள்ள பண்டங்கள் சீரணமாவதில்லை. புற்று நோய்க்கான நச்சு தேவை இல்லாத கழிவுகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு மலத்துடன் வெளியேறுகிறது.
சாப்பிடும் போது கோபம், டென்ஷன் கூடாது. அந்நேரத்தில் சுரக்கப்படும் என்சைமால் சாப்பிட்ட உணவு சீரணமாகாமல் விடுகிறது. அதாவது அந்த என்சைம் அஜீரணக் கோளாறை ஏற்படுத்துகிறது.
நமது உடலில் இயக்கத்திற்கு குறைந்த அளவு கொழுப்பே போதுமானது.
ஒரு கிராம் எண்ணையில் உள்ள கொழுப்புக் கலோரியை விட, ஒரு கிலோ காபேஜில் குறைவாகவே உள்ளது.
அசைவம் சாப்பிடுபவர்கள் கோழி,மீன் இவற்றில் 100 கிராம் அளவிற்கு உட்கொண்டாலே போதுமானது. கொழுப்புச் சத்து மீனுக்கு மீன் வேறுபடும். கருமை நிறமாக, சதைப் பற்றுள்ள மீனில் கொழுப்புச் சத்தும் கலோரியும் அதிகம். சதைப் பற்று குறைவாகவே உள்ள மீன்களை எண்ணையில் பொரித்து எடுக்கும் போது அதன் கலோரி அளவு அதிகரித்து விடுகிறது.
நாம் எதை உண்கிறோமா அது தான் நமது பருமனிற்குக் காரணமாகிறது.
கேக், ஐஸ்கிரீம்களைக் கூட டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் மிதமான அளவில் இருக்க வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது மற்ற ஐட்டங்களுக்கு நோ சொல்லி விடலாம்.
ஒரு முறை ஒருவர் தன் பருமனைக் குறைத்தவர் சந்தர்ப்பவசத்தால் மீண்டும் குண்டடித்து விட்டாரானால் மறுபடி அவர் தன் எடையை இழப்பது கடினமான ஒன்றாகி விடுகிறது.
குண்டாக இருப்பதாய் விட அடிக்கடி இளைத்து , குண்டாகிறவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்பு அதிகம். பேக்கரி, மதுபான வகைகளுக்கு ‘பைபை’ சொல்கிறவராயின் அவர் சிரமம் இல்லாமல் தன் இலட்சியத்தை அடைய முடியும்.
தற்போது பாஸ்ட்டு புட் சென்டர்கள் பெருகிவிட்டன. தேர்ந்தெடுத்து உண்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
எடை இழப்பிற்கு உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும் இணைந்து மேற்கொண்டால் தான் சிறந்த பலனை அடைய முடியும்.
உணவில் போதுமான சத்துக்கள் இல்லாவிடில் உடலின் நோய்த் தடுப்பாற்றல் குறைகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...