இன்னும் 10 ஆண்டுகளில் தோரியம் மூலம் மின் உற்பத்தி: கலாம்

இன்னும் 10 ஆண்டுகளில் தோரியம் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார். சீனத்தலைநகர் பீஜிங்கில் நிருபர்களிடம் பேசிய அவர், “இந்தியா தற்போது அணுசக்தி மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஏனெனில் அணுசக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தாது. இந்தியாவிடம் ஏராளமான தோரிய வளம் உள்ளது. எனினும் தற்போது யுரேனியம் மூலமே மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா
தோரியம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யத்துவங்கி விடும். அப்போது மின்சாரம் குறித்த கவலை எங்களுக்கு இருக்கப்போவதில்லை” என்று அவர் கூறினார்.

மேலும், புகுஷிமா அணுஉலை விபத்தின் போது நிறுத்தப்பட்ட 40 அணுமின் திட்டங்களை மீண்டும் துவங்க சீனா முடிவு செய்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாதுகாப்பு அம்சங்களை மனதில் கொண்டே இந்திய அணுசக்தி துறையின் செயல்பாடுகள் இருப்பதாக தெரிவித்தார். சீனாவில் தற்போது புதிதாக 40 அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புகுஷிமா அணுஉலை விபத்துக்குப்பிறகு அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது அவற்றை மீண்டும் துவங்க சீனா அனுமதி வழங்கியுள்களது. மேலும், சீனாவில் 13 அணுமின் நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கூடங்குளத்தில் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த கலாம், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களை விவாதம் நடத்தாதீர்கள். கலந்தாலோசிக்காதீர்கள் என நாம் கூற முடியாது. நான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்டுள்ளேன். அது 4 அடுக்கு இன்டர் லாக் சிஸ்டம் பாதுகாப்பு வசதிகளை கொண்ட அணுஉலை. புகுஷிமா அணுஉலையை ஒப்பிடும் போது, கூடங்குளம் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டது” என்று கூறினார். அனல் மின்சாரம் மூலம் மின் உற்பத்தி செய்யும் போது, பல்லாயிரக்கணக்கான டன் நிலக்கரி எரிக்கப்படுவதாகவும், அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆனால் அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் போது, சில டன்களே போதுமானது என்றும் அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...