மதுரை காமராஜ் பல்கலை மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி யு.ஜி.சி.,க்கு "கருத்துரு' அளிப்பு


:மதுரை காமராஜ் பல்கலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.100 கோடிக்கான திட்ட கருத்துரு தயாரித்து, யு.ஜி.சி.,யிடம் அளிக்கப்பட்டது.ஆற்றல்சால் அந்தஸ்து பெற்ற இப்பல்கலையில் 18 புலங்கள், 75 துறைகள் உள்ளன. தொலைநிலை கல்வி மூலம் 112 படிப்புகளை 1.26 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். பல்கலையை மேம்படுத்துவதற்காக தற்போது பல்வேறு திட்ட கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டன.

இதில், பல்கலையை "கிரீன் கேம்பஸாக' மாற்றுதவற்கு பல்கலைக்கு தேவைப்படும் மொத்த மின்சார தேவையையும்
சூரிய ஒளி மூலம் பெறுவது, வீணாகும் நீரை சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றுவது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கான அதி நவீன லேப் வசதிகள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு உலக தரத்திலான அரங்கு, பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு தேவையான நவீன கற்பித்தல் உபகரணங்கள், அறிவியல் துறைகளுக்கு தகுதியான பேராசிரியர்கள் நியமனம், நூலக மேம்பாடு போன்றவற்றுக்கு ரூ.100 கோடிக்கான திட்ட கருத்துரு தயாரிக்கப்பட்டு, யு.ஜி.சி., செயலாளர் கே.பி.சிங்கிடம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய படிப்புகளுக்கு அங்கீகாரம்: இப்பல்கலையில், "பிலிம் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் மீடியா ஸ்டடிசில்' பி.டெக்., எம்.டெக்., படிப்புகள், எம்.பி.ஏ., "டூரிஸம்' போன்ற புதிய படிப்புகளுக்கும் யு.ஜி.சி., அங்கீகாரம் வழங்கியுள்ளது.துணைவேந்தர் கல்யாணி கூறியதாவது:பல்கலை மேம்பாட்டுக்கு தமிழக அரசின் நிதி கிடைக்கிறது. அத்துடன், பல்கலை வளர்ச்சிக்கு ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடிக்கான "திட்ட கருத்து' யு.ஜி.சி., செயலரிடம் அளித்துள்ளேன். இந்த நிதியை இருகட்டங்களாக வழங்க கோரப்பட்டுள்ளது. பல்கலை கோரிய மொத்த நிதியையும் யு.ஜி.சி., வழங்கிவிடாது. பலகட்ட ஆய்வுக்கு பின் யு.ஜி.சி., வழங்கும். புதிய படிப்புகளுக்கும் யு.ஜி.சி., இந்தாண்டு அங்கீகாரம் அளித்துள்ளது, என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...