குழந்தைகளுக்காக பிரத்யேக "108' ஐந்து மாவட்டங்களில் அமல்

சென்னை, மதுரை, தர்மபுரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், குழந்தைகளுக்கான பிரத்யேக, "108' அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில், அனைத்து மாவட்டங்களுக்கும், இவை வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில், "108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை அளித்து வரும், "இ.எம்.ஆர்.ஐ., - அவசரகால நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்'
குழந்தைகளுக்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் இயக்க முடிவு செய்தது. இதற்காக, கடந்த, செப்டம்பர் மாதம், தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக இயங்கும், "108' அவசரகால ஆம்புலன்சில், கூடுதலாக, சிறிய ஆக்சிஜன் சிலிண்டர், சிறிய படுக்கை, "இங்குபேட்டர், ஸ்கேனிங், எக்ஸ்ரே' உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான வாகனம் என்பதை குறிக்கும் வகையில், குழந்தையின் படம், ஆம்புலன்சில் இடம் பெறும். தமிழகத்தில், சென்னையை ஒட்டி இரண்டு மாவட்டங்கள், தர்மபுரி, விழுப்புரம், மதுரை என, ஐந்து மாவட்டங்களுக்கு, தலா, ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: இந்த வாகனத்தில், 12 வயது வரை உள்ள குழந்தைகளை ஏற்றிக் கொள்கிறோம். 13 வயதுக்கு மேற்பட்டவரை, அனுமதிக்க மாட்டோம். ஜன., இறுதிக்குள், அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் வர உள்ளது. அழைப்புகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலாக ஆம்புலன்ஸ் வாங்குவது குறித்து பரிசீலிப்போம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...