வாகன விதிகளை திரும்ப பெற வலியுறுத்திவரும் 19ல் பள்ளி வாகனங்கள் நிறுத்தம்

""பள்ளி வாகனங்களில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, தமிழக அரசு அறிவித்துள்ள விதிகளில், நடைமுறையில் கடைபிடிக்க முடியாத விதிகளை, திரும்ப பெற கோரி, தமிழகம் முழுவதும், வரும், 19ம் தேதி, பள்ளி வாகனங்கள் நிறுத்தப்படும்,'' என, தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர், சந்திரசேகர் தெரிவித்தார்.கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். பின் அவர் கூறியதாவது:பள்ளி வாகனங்களில்

ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, 11 விதிகள் அடங்கிய அரசாணையை தமிழக அரசு, செப்., 30ம் தேதி வெளியிட்டு, அக்., 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.இந்த விதிகளில் பலவற்றை தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பாக வரவேற்கிறோம். இருப்பினும், ஒரு சில விதிகள், பள்ளி வாகன இயக்கத்துக்கு ஏற்புடையதாக இல்லை.
குறிப்பாக, பள்ளி வாகனங்களில், நடத்துனர் உரிமம் பெற்ற ஒருவரை உதவியாளராக நியமிப்பது, பள்ளி வாகனத்தில் படியின் உயரம் மாற்றியமைத்தல், அவசர வழி அமைத்தல், வேகக் கட்டுப்பாட்டு கருவி அமைத்தல், சிறப்பு குழுவினர் மூலம் தகுதி சான்று பெறுதல் போன்ற விதிமுறைகள், பள்ளி வாகன இயக்கத்துக்கு ஏற்புடையதாக இல்லை.

இது குறித்து, ஏற்கனவே கூட்டமைப்பு மூலம், செப்., 14ம் தேதி, அரசுக்கு கருத்துகளை சமர்பித்தோம். என்ன காரணத்தினாலோ எங்களது பரிந்துரைகள் எதுவும் பரிசீலிக்கப்படாமல், உயர் நீதிமன்றத்தில் சமர்பித்த வரைவு விதிகளை அரசு, தற்போது அரசாணையாக வெளியிட்டுள்ளது.இந்த விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், வரும் 19ம் தேதி, தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை, இயக்காமல் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
அன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும். பெற்றோர், 19ம் தேதி மட்டும் தங்கள் பொறுப்பில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து, திரும்ப அழைத்து செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.செயலர்கள் நந்தகுமார், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்; கொங்கரசன் வரவேற்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...