குருப் 2 தேர்வு கீ ஆன்சரில் தவறு இருந்தால் 14ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்


குரூப் 2 தேர்வு கீ ஆன்சரில் தவறு இருந்தால் வரும் 14ம் தேதி வரை ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த சார் நிலை பணியில் (குரூப்2) சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை ஆய்வாளர்,
கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவியில் 3,687 பேரை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடந்தது.தேர்வின் போது, வினாத்தாள் வெளியானதால் குரூப் 2 தேர்வு முடிவு வெளியிடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி மறு தேர்வு நடந்தது. தேர்வு எழுத மொத்தம் 6,49,209 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இத்தேர்வை 3,74,338 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். 2,74,871 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.
இந்நிலையில், மறு தேர்வுக்கான வினா விடை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.tஸீஜீsநீ.ரீஷீஸ்.வீஸீ) வெளியிடப்பட்டுள்ளது. பொது அறிவு&தமிழ், பொது அறிவு&ஆங்கிலம் ஆகிய இரு தாள்களுக்கான விடைகள் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.விடையில் ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 14ம் தேதி ஆட்சேபனைகளை தெரிவிக்க கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், வல்லுனர் குழு ஆய்வு செய்து மீண்டும் விடை   இணையதளத்தில் வெளியிடப்படும். அதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தப்பட்டு 45 நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...