2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை 3 மாதத்தில் மரமாக மாற்றிய இளைஞர்கள்


செடி வைத்து நடவு செய்து, இரண்டு ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல், 90 நாட்களில் மரமாக உருவாக்கி, நெல்லையை சேர்ந்த, தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர்.நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த, இளைஞர்கள் செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை துவக்கி, மரக்கன்றுகள் வளர்த்து பசுமைப்புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.

விதைகள் பாவு செய்து, மரக்கன்றுகளை உற்பத்தி செய்த தன்னார்வ இளைஞர்கள், மரத்தின் பெரிய கம்புகளை வெட்டி, நடவு செய்து,

இயற்கை உரங்களை போட்டு, 90 நாட்களிலேயே மரங்களாக உருவாக்கி, புதிய சாதனையை படைத்துள்ளனர்."செப்பறை வல பூமி பசுமை உலகம்' அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அர்ஜுனன், ராஜு, சின்னத்தம்பி, ரவிக்குமார், சங்கர் உள்ளிட்ட, இளைஞர்கள் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்திந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், "விதைகளை பாவு செய்து மரக்கன்றுகளை உருவாக்கி, அதை மரங்களாக மாற்ற, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மரங்களில் உள்ள கிளைகளின் கம்புகளை வெட்டி, இயற்கை உரத்தை போட்டு, 90 நாட்களில் அவற்றை மரங்களாக மாற்றும் புதிய முறையை, ராஜவல்லிபுரத்தில் செயல்படுத்தியுள்ளோம்.

பசுமைப்புரட்சி:நவீன காலத்தில் நமது வசதிக்கேற்ப, இந்த முறையில், மரங்களை குறுகிய காலத்தில் வளர்க்க முடியும். மரம் வளர்ப்பதால் பசுமைப்புரட்சியும், மழை வளமும் ஏற்படும். இந்த புதிய முறையால், ஒவ்வொரு கிராமத்தையும், இரண்டு ஆண்டுகளில் பசுமையாக்க முடியும்.இந்த புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தவும், பசுமைப்புரட்சி ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மானிய உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து, செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த, அர்ஜுனன் கூறுகையில், "எங்கள் அமைப்பு சார்பில் விதைகளை போட்டு மரக்கன்றுகளை உருவாக்கி, அதை மக்களுக்கு இலவசமாக வழங்கிவந்தோம். "ராஜவல்லிபுரம், தாழையூத்து பகுதியில், 27 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம். ராஜவல்லிபுரத்தில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமை புரட்சி ஏற்படுத்தியுள்ளோம்.

இயற்கை உரங்கள்:மரத்தின் கம்புகளை வெட்டி, இயற்கை உரங்களை போட்டு, மரங்களாக உருவாக்கும், புதிய முயற்சியை செய்தோம். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், புதிய முறையில், 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து பலனை தந்துள்ளது.இந்த முறைக்கு பணம் அதிகம் செலவாகாது. தண்ணீரும் குறைவாக தான் செலவாகும். இந்த புதிய முறையில் வேம்பு, மா, அத்தி, அரசு, பூவரசு போன்ற, மரங்கள் வளர்ந்துள்ளன.

எங்களது முயற்சிக்கு, பாலாமடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முகம்மதுகனி வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவினால், அனைத்து கிராமங்களிலும், எங்களது புதிய முயற்சியை பயன்படுத்தி மரங்களை வளர்க்கவும், பசுமை புரட்சி ஏற்படுத்தவும் பாடுபடுவோம்.மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு பதிலாக, மரத்தின் கம்புகளை வெட்டி, அதை மரமாக மாற்றும் திட்டத்தையும் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தவேண்டும். இதற்கான பயிற்சியை அளிக்கவும், எங்கள் அமைப்பு தயாராக உள்ளது. இவ்வாறு, அர்ஜுனன் கூறினார்.

கலெக்டரிடம் மனு அளித்த, "செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், மரக்கம்புகளால், 90 நாட்களில் உருவாக்கிய மரக்கன்றுகளையும் எடுத்துவந்து கலெக்டரிடம் காட்டினர். "இந்த புதிய முயற்சியை அதிகாரிகளும், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களும் பாராட்டினர்.'

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...