குரூப் 2 தேர்வு: ஒன்றரை மாதத்தில் முடிவு

குரூப் 2 தேர்வு முடிவுகள் ஒன்றரை மாதத்தில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்தார்.
குரூப் 2 பிரிவில் நகராட்சி ஆணையாளர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் என 3 ஆயிரத்து 687  பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் முன்பே வெளியானதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்வு ரத்து
செய்யப்பட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், குரூப் 2 மறு தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்வு எழுத 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 60 சதவீதம் பேர் ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மொத்தம் 73,000 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு நடக்கும் மையங்கள் அனைத்தும் விடியோ கேமராக்கள் மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன. தேர்வுப் பணி மற்றும் பறக்கும் படைப் பணியில் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் கூறியது: குரூப் 2 தேர்வு முடிவுகள் ஒன்றரை மாதத்தில் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக 2 நாள்களில் டிஎன்பிஎஸ்சி  இணையதள முகவரியில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் வினாவுக்கான விடைகள் கொடுக்கப்படும். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனே தெரிவிக்கலாம். ஒரு வாரத்தில் இறுதி செய்யப்பட்ட விடைகள் அளிக்கப்படும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...