அரசு ஊழியர்களை உற்சாகப்படுத்த நவ.,24, 25ல் விளையாட்டு போட்டி


அரசு பணியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அரசு பணியாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி வரும், 24 மற்றும், 25ம் தேதிகளில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்பட
உள்ளது. 24ம் தேதி வாலிபால், பாட்மின்டன், டேபிள்டென்னிஸ், கால்பந்து, செஸ் ஆகிய குழுப்போட்டி நடக்கும். போட்டியில் அரசு பணியாளர்கள் துறைக்கு ஒரு அணியாக பங்கேற்கலாம். இப்போட்டியில் அரசு பணியாளர்களின் குழந்தைகள், 12, 20 வயதிற்குட்பட்டவர்கள் என, இரண்டு பிரிவாக இருபாலருக்கும் நடத்தப்படும்.மறுநாள் (25ம் தேதி) 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படும். தடகள போட்டிகள் அரசு பணியாளர்களுக்கு, 30, 40, 50 வயதுக்குட்பட்டவர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என, நான்கு பிரிவாக, ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்படும். அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு, 12, 20 வயதிற்குட்பட்டவர்கள் என, இரண்டு பிரிவாக ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...