386 பள்ளிகளுக்கு 15 சதவீத கட்டணம் உயர்வு


கட்டண கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மேலும் 15 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கேட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த 386 பள்ளிகளுக்கு புதிய கட்டணத்தை கட்டண கமிட்டி நேற்று வெளியிட்டது. தனியார் பள்ளிகள் கட்டணத்தை முறைப்படுத்த கடந்த 2009ம் ஆண்டு கட்டண கமிட்டி அமைக்கப்பட்டது. முதலில் அந்த கமிட்டிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமை ஏற்றார்.

13000 பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தார். அந்த கட்டணம் போதாது என்று 6400 தனியார் பள்ளிகள் தெரிவித்தன. இதற்கிடையே நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டார். 6400 பள்ளிகளிடம் விசாரணை நடத்தி 2010ல் அந்த பள்ளிகளுக்கு திருத்தப்பட்ட கட்டணத்தை நிர்ணயித்தார். ஆனால் 386 தனியார் பள்ளி நிர்வாகிகள்மேலும் 15 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அதில், 386 பள்ளிகளையும் நேரடியாக அழைத்து,
2011&2012ம் ஆண்டு கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து 15 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே,  தலைவர் பொறுப்பில் இருந்து நீதிபதி ரவிராஜ பாண்டியன் விலகினார். அவருக்கு பதிலாக பொறுப்பேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு உயர்நீதி மன்றம் தெரிவித்தபடி 386 பள்ளிகளையும் அழைத்து விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணை அக்டோபர் மாதம் முடிந்தது. இதையடுத்து அந்த பள்ளிகளுக்கு 2011&2015ம் ஆண்டு வரையிலான கட்டணத்தை கமிட்டி நிர்ணயம் செய்தது.
இதற்கான உத்தரவுகள் நேற்று காலை அரசிடம் வழங்கப்பட்டது. நேற்று மதியம் மேற்கண்ட பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதன்படி சென்னையில் 43 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரம், அதிகபட்சமாக
ரூ.35 ஆயிரம் வரையும், திருவள்ளூர் மாவட்டத்தில் 27 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்சமாக
ரூ.5 ஆயிரம், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரையும்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 பள்ளிகளுக்கு குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரம்,அதிகபட்சமாக
ரூ.17 ஆயிரம் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கோவை 24, கடலூர் 5, தருமபுரி 6, திண்டுக்கல், ஈரோடு 53 உள்ளிட்ட மொத்தம் 386 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 பள்ளிகளுக்கும் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கரூர் 1, திருவள்ளூர் 3, மதுரை 1, திருச்சி 1 பள்ளிகள் அடங்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...