400 பாடல்களையும் ஒப்பிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவன்

புதுச்சேரியில், அரசுப் பள்ளியைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவன் மு.பிரகதீஸ்வரன் (படம்) நாலடியாரில் உள்ள 400 பாடல்களையும் பொருளுடன் மனப்பாடமாக சொல்கிறார். இவர், ஏற்கெனவே திருக்குறளில் 1,330 பாடல்களையும் பொருளுடன் சொல்லி சாதனை படைத்தவர்.
பெத்துசெட்டிப்பேட்டையைச் சேர்ந்த சு.முருகன்-மு.கீர்த்திகா தம்பதியின் மகன் மு.பிரகதீஸ்வரன் (படம்). அதே பகுதியில் உள்ள அரசு
புத்தொளிர் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை முருகன், மளிகை கடையில் தினக் கூலி தொழிலாளராக வேலை செய்கிறார்.
பிரகதீஸ்வரன் ஏற்கனவே திருக்குறளில் உள்ள 1330 பாடல்களையும் மனப்பாடமாக பொருளுடன் சொல்வதில் வல்லவர். எந்தக் குறளை கேட்டாலும் தயங்காமல் சொல்வார். அதற்கு உரிய விளக்கத்தையும் சொல்வார். மேலும் திருக்குறளில் உள்ள சிறப்புகள், எவைப் பற்றியெல்லாம் பாடப்பட்டுள்ளது என்பதையும் தெளிவாக விளக்கத்துடன் கூறுகிறார்.
இவர் தற்போது நாலடியாரில் உள்ள 400 பாடல்களையும் பொருள் விளக்கத்துடன், மனப்பாடமாக கூறுகிறார். இவரிடம், பாடலின் எண்ணைக் கூறினாலே போதும், அப் பாடலுடன் விளக்கமும் சொல்கிறார். கடந்த 6 மாதங்களில் இந்த நாலடியார் பாடல் மற்றும் அதன் விளக்கங்களை படித்து முடித்துள்ளதாக கூறுகிறார் பிரகதீஸ்வரன்.
இவர், சமீபத்தில் குறளிசைக் கூடு என்னும் அமைப்பு சார்பில் நடைபெற்ற நாலடியார் விழாவில் பங்கேற்று நாலடியார் பாடல்கள் அனைத்தையும் மனப்பாடமாக கூறி அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இவரது திறமையை பாராட்டி உலகத் திருக்குறள் மையம் "குறள் வளர்ச்செல்வன்' விருதை கடந்த ஜனவரி மாதம் வழங்கியது. லயன் சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தலுக்கான சான்றிதழும், மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் யுவஸ்ரீ கலா பாரதி விருதும் இச் சிறுவன் பெற்றுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...