சிறுபான்மை பள்ளிகளில் அடிப்படை வசதிக்கு ரூ.50 லட்சம்

சிறுபான்மை பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த, அடிப்படை கட்டடமைப்பு வளர்ச்சி திட்டத்தில் (ஐ.டி.எம்.ஐ.,), மத்திய அரசு, 50 லட்சம் நிதி வழங்குகிறது. இப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, புதிய திட்டத்தை, அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, முதன்மைக் கல்வி அலுவலர், பிற்பட்ட, சிறுபான்மை நல அலுவலர், சிறுபான்மை உறுப்பினர்கள் இருவர், தொடக்கக்கல்வி அலுவலர் கொண்ட குழு
அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்து, நிதி வழங்க பரிந்துரைக்கும். அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இந்நிதியை பெற, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம். மானியக்குழுவின் பரிந்துரைகள், தொடக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். பின், நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...