மூன்றாம் பருவப் புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற டிசம்பர் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர் டிசம்பர் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியத்தின் தலைவரும், பள்ளிக் கல்வி இயக்குநருமான கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முப்பருவ பாடத்திட்டத்தின் கீழ் 2012-13 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இறுதிசெய்யப்பட்ட மூன்றாம் பருவப் பாடத்திட்டத்துக்கு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் பாடத்திட்டம் பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள்
பார்வைக்காக ஜ்ஜ்ஜ்.க்ள்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் நீங்கலாக இதர பாடப்புத்தகங்களை முப்பருவ கல்வி முறை திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர் டிசம்பர் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
புத்தகங்களின் 2 நகல்களை உறுப்பினர்-செயலர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை - சென்னை-6 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.
ஒவ்வொரு பாடப்புத்தகங்களுக்கான வரையறை: மல்டிகலர், ஏ-4 அளவு, 80 ஜி.எஸ்.எம். ஹைடெக் மேப்லிதோ தாள், சி.டி.பி., 200 ஜி.எஸ்.எம். விர்ஜின் கோடட் போர்டு அட்டை.
ஒவ்வொரு பாடப்புத்தகத்துக்கும் தோராய விலை குறிப்பிட வேண்டும் என்று தேவராஜன் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...