8ம் வகுப்பு மாணவியருக்கு வாழ்வியல் திறன் பயிற்சி


எஸ்.எஸ்.ஏ., சார்பில் எட்டாம் வகுப்பு மாணவியருக்கு வாழ்வியல் திறன்வளர்க்கும் பயிற்சி முகாம், திருப்பூரில் நேற்று துவங்கியது.
தன்னைத்தானே அறிதல், அடையாளம், தோல்வியை எதிர்கொள்வது, பயம், வெட்கம், தயக்கம் தவிர்த்தல், சரி, தவறு தீர்மானித்தல், நேர்மறை எண்ணங்களை உயர்த்திக் கொள்வது, ஒளிர் அறிவின் தீர்வு, குறிக்கோள், தீர்வு காணும் வழிகள்,

ஊக்கம், குழந்தை தொழிலாளர்கள் முறை, பெண்ணின் பரிமாணங்கள், விளையாட்டு, தியானம் மற்றும் யோகா, நலவாழ்வு ஆகிய 14 தலைப்புகளில், வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி, மாணவியருக்கு அளிக்கப்படுகிறது.நல்லூர், குமரானந்தபுரம், கே.வி.ஆர்., நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள், ஆண்டிபாளையம் மற்றும்
15 வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் இருந்து ஒருபள்ளிக்கு 20 பேர் வீதம், 100 மாணவியர், எஸ்.எஸ்.ஏ., பயிற்சி மையத்தில் நடந்த முகாமில் பங்கேற்றனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாமணி, ஆசிரிய பயிற்றுனர் நிர்மலா பயிற்சி அளித்தனர்.நிர்மலா பேசியதாவது:நாம் யார் என்பதை அறிந்து கொள்வதில், ஒவ்வொருவரும் ஆர்வம் காட்ட வேண்டும்; வாழ்க்கையில் யாரும் அடையாளம் இல்லாமல் போய் விடக் கூடாது. அந்த அடையாளத்தை அடைவதற்கான குறிக்கோளுடன், வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
நல்ல எண்ணங்களை மனதில் உருவாக்கிக் கொள்வதால், வாழ்க்கை மேம்படும்; தோல்வி இல்லாமல், வாழ்க்கை இல்லை. தோல்வியை எதிர்கொள்வதே, வெற்றிக்கான வாய்ப்பாக அமைகிறது. எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளது; அதை கண்டறிவதில் வெற்றி அடங்கியிருக்கிறது. தோல்வி வந்தாலும், எதிர்நீச்சல் போட்டுச் செல்ல வேண்டும்.மன இறுக்கம் தவிர்க்க, யோகா,
தியானம் உதவும்; மனதை ஒருநிலைப் படுத்தி செய்யும் செயல்கள், வெற்றியை கொடுக்கும். பல்வேறு கோணங்களில் வாழ்க்கையை சிந்திக்க பழக வேண்டும்; தெளிந்த நல்ல அறிவும், ஆராய்ந்து அறியும் தெளிவும் மாணவியருக்கு வர வேண்டும், என்றார்.பயிற்சி பெறும் மாணவியரை ஒரு மாதம் கண்காணித்து, அதன்பின் மீண்டும் ஒரு நாள் பயிற்சி நடத்தி, மாணவியரின் முன்னேற்றம், பயிற்சியால் கிடைத்த பயன் குறித்து கண்டறியப்பட உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...