பாரதியார் பல்கலைக்கு ரூ. 9 கோடி யு.ஜி.சி., நிதி ஒதுக்கீடு

:பாரதியார் பல்கலைக்கு, பல்கலை மானியக் குழு(யு.ஜி.சி.,) ஒன்பது கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக, துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை தெரிவித்துள்ளார்.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை மற்றும் பேராசிரியர் ஜெயக்குமார் ஆகியோர், பல்கலை மானியக்குழு இணை செயலர் அர்ச்சனா தாகூரிடம்,
11ம் ஐந்தாண்டு திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து டில்லியில், விவாதித்தனர்.இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை கூறியதாவது:
பல்கலையில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில், 200 கம்ப்யூட்டர்களுடன் கூடிய பொது கம்ப்யூட்டர் மையம், விரைவில் அமைக்கப்படும். இதில் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர்கள் இடம்பெறும். பெண் ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டுக்கு கூடுதலாக விடுதி வசதிகள் அமைக்கப்படும். மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கு கூடுதல் கருவிகள் வாங்கப்படும்.மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், பல்கலையின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல சாய்வு நிலை படிக்கட்டுக்கள் அமைக்கப்படும். சமூகப் பணித்துறையில் மாற்றுத்திறனாளிகள் உதவி மையம் அமைக்கப்படும். பல்கலை விளையாட்டு துறை வளர்ச்சி, மாணவிகள் விடுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், பொது கம்ப்யூட்டர் மையம், அடுத்து ஓராண்டுக்கான புத்தகங்கள் மற்றும் ஆய்வுக் கருவிகள் வாங்குதல் போன்றவற்றுக்கு ஒன்பது கோடி ரூபாய் நிதியை யு.ஜி.சி., ஒதுக்கியுள்ளது.பல்கலை மற்றும் சார்புக் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 48 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இதில், 65 சதவீதம் பேர் இளங்கலை பட்டத்துடன் வேலை தேடுகின்றனர். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களில் 100க்கு பத்து பேருக்கு மட்டும் வேலை கிடைக்கிறது. போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் திட்டம் டிச., மாதம் துவங்கப்படும். இறுதியாண்டு மாணவர்களின் ஆங்கிலம், கணிதம், உள்ளிட்ட பல்வேறு திறன்களை மேம்படுத்தும் வகையில், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...