கல்வி கடன் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு கண்டிப்பு

"கல்விக் கடன் கோரும் மாணவர்களின் விண்ணப்பங்களை, தொழில் நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்க கூடாது' என, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.கல்விக் கடன் கோரி, நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள், வங்கிகளில் விண்ணப்பிக்கின்றனர். சம்பந்தபட்ட வங்கியின், "சர்வீஸ் ஏரியா'வுக்குள் வசிக்காத,
மாணவர்களின் விண்ணப்பங்கள், வங்கிகளால் நிராகரிக்கப்படுகின்றன.சில ஆண்டுகளாக, இதுபோல், ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, புகார்கள் குவிந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை:தொழில் நுட்ப காரணங்களை காட்டி, மாணவர்களின் கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது. குறிப்பாக, சம்பந்தபட்ட வங்கிகளின், "சர்வீஸ் ஏரியா'வுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்காத மாணவர்களுக்கு, வங்கிகளால், கல்வி கடன் மறுக்கப்படுவது, சரியான நடைமுறை அல்ல.வங்கிகளின்,"சர்வீஸ் ஏரியா'வுக்கு வெளியில் வசிக்கும் மாணவர்களுக்கும், கல்வி கடன் வழங்க வேண்டும். வங்கிகளை பொறுத்தவரை, "சர்வீஸ் ஏரியா'என்பது, அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தான் பொருந்தும்; மாணவர்களின் கல்வி கடன் விஷயத்தில், இந்த நடைமுறையை பின்பற்றக் கூடாது.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...