ஆசிரியர் தகுதி மறு தேர்வுக்கான இறுதி விடைகள் வெளியிடப்படாததால் குழப்பம்


தமிழகத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி மறு தேர்வுக்கான இறுதி விடைகள் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படாதது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இதில் 0.36 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றிருந்தனர்.
 இதையடுத்து மறு தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து அறிவித்தது.
 அதன்படி கடந்த மாதம் 14ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டது.
 கடந்த ஒரு வாரத்துக்குமுன் இத் தேர்வுக்கான

சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் ஆட்சேபம் தெரிவிக்க ஒரு வாரம் காலஅவகாசம் தரப்பட்டிருந்தது.
 தமிழகம் முழுவதும் பலர் ஆட்சேபம் தெரிவித்ததாகவும், அவை வல்லுநர் குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டதாகவும் தேர்வு வாரியம் தெரிவித்தது.
 இந்நிலையில் வெள்ளிக்கிழமை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் இறுதிபடுத்தப்பட்ட விடைகள் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த விடைகளும் நீக்கப்பட்டுள்ளன.
 இதனால் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் என்ன என்பது தேர்வர்களுக்கு இதுவரை தெரியவில்லை.
 தேர்வில் 2ஆம் தாளில் இரு கேள்விகள் தவறானவை என்று தேர்வு வாரியம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
 அந்தக் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதா அல்லது அவற்றை குறைத்து மதிப்பிட்டுள்ளதா என்பது குறித்து தேர்வு வாரியம் எவ்வித விளக்கத்தையும் தரவில்லை. இது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்ட பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஆனாலும், இறுதிசெய்யப்பட்ட சரியான விடைகள் வெளியிடப்பட்டால் மட்டுமே சந்தேகங்கள் தீர்க்கப்படும் என்று தேர்வர்கள் கூறுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...