நரிக்குறவ மாணவ, மாணவியருக்கு சிறப்பு கணினி பயிற்சி

திருவள்ளூர் பெரியகுப்பம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் கணினி பயிற்சி பெறும் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், திருவள்ளூரில் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு சிறப்பு கணினி பயிற்சி வழங்கப்படுகிறது.
 அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கல்வித் தரத்தை உயர்த்தவும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி வருகின்றன.
 இதற்காக வட்டார வளமையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சிகளை அளிக்கவும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 குறிப்பாக, பள்ளிகளுக்கு தேவையான கட்டட வசதிகள், கழிப்பறைகள், மதில் சுவர், கல்வி
உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்டவை செய்யப்படுகின்றன.
 மேலும் பள்ளி இடை நின்ற மாணவ, மாணவியர், பள்ளிச்செல்லா குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கிட்டும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
 திருவள்ளூர் மாவட்டத்திலும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   இதன் ஒரு பகுதியாக, இடைநின்ற குழந்தைகள், பள்ளிச்செல்லா குழந்தைகளுக்கு குறுகிய, நீண்ட கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
 இதன் ஒரு கட்டமாக, திருவள்ளூர் ஒன்றியத்தில் செவ்வாபேட்டை, புங்கத்தூர், பெரியகுப்பம் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் மூலம் பயிற்சிகள் தரப்படுகின்றன.
நரிக்குறவ இனத்தவர்: பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் உள்ளன. இவற்றைச் சேர்ந்த 20 மாணவ, மாணவியர் டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்னர்.  அவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள், புத்தகப்பை வழங்கப்பட்டு நாள்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
கணினிப் பயிற்சி:  நரிக்குறவ இனத்தவர் ஓரிடத்தில் தொடர்ந்து தங்க மாட்டார்கள் என்ற சூழ்நிலையில் அக்குழந்தைகளுக்கு சிறப்பு கணினி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
 அடிப்படை கணினி பயிற்சி, குறிப்பாக கடைகளில் கணினியைக் கொண்டு பணிபுரிவதற்கான தகுதி அவர்களுக்கு பயிற்சியின் மூலம் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்காலம் 3 மாதங்கள் ஆகும்.
இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஞானசேகரன் கூறியது:
 இதுபோன்ற சிறப்பு பயிற்சிகள் மாவட்டம் முழுவதும் 60 மையங்களில் 600 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. திருவள்ளூரில்தான் நரிக்குறவ இனத்தவருக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர் என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...