வீட்டிற்கு ஒரு கழிப்பறை விழிப்புணர்வுக்கு உத்தரவு

வீட்டிற்கு ஒரு கழிப்பறை அமைப்பது குறித்து, வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. உலகில், 200 கோடி மக்களுக்கு, கழிப்பிட வசதி இல்லை. சுத்தமில்லாத சுகாதார வளாகங்களால், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களால்
பாதிக்கப்பட்டு, இறக்க நேரிடுகிறது. உலக கழிப்பறை தினம், நவ., 19ல் கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி, அனைத்து கிராமங்களிலும், திறந்தவெளி கழிப்பிடத்தால் ஏற்படும் நோய்கள், வீட்டிற்கு ஒரு கழிப்பறையின் தேவை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. "மகளிர் சுய உதவி குழுக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம், வீடு வீடாக, பிரசாரம், ஊர்வலம் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...