பார்த்தீனிய செடி ஒழிக்க எளிய வழி வேளாண்துறை அதிகாரி தகவல்

:"உடல் நலனுக்கு தீங்கான பார்த்தீனிய செடிகளை அழிக்க எளிய வழி உள்ளது,' என, வேளாண் அதிகாரி அன்னூரில் தெரிவித்தார். அன்னூர் வட்டார தெற்கு பகுதி விவசாயிகளுக்கான முன்பருவ முகாம் எல்லப்பாளையத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் சாந்தி நடராஜன் முன்னிலை வகித்தார். பவனிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் முகமது யாசின் பேசியதாவது:
அமெரிக்காவை
தாயகமாக கொண்டது பார்த்தீனியம். வெளிநாட்டு நச்சுக்களுடன் 1955ல் நம் நாட்டுக்கு வந்தது. எந்த சூழ்நிலையிலும் வளரக்கூடியது. உடல் நலத்திற்கு தீங்கு விளைவித்து வருகிறது.
பார்த்தீனிய செடியில் உள்ள பார்த்தீனின், அம்புரோசின் ஆகிய நச்சுப் பொருட்களால், தோல் அரிப்பு, வெடிப்பு, கொப்புளம் உள்ளிட்ட தோல் நோய்கள், மூச்சுத்திணறல், உடல் ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது. பார்த்தீனியம் செடி பூக்கும் முன் கட்டுப்படுத்த, கையுறை அணிந்து செடியை வேருடன் அகற்றி எரிக்கலாம். ஒரு லிட்டர் நீரில், 200 கிராம் சமையல் உப்பு, ஒரு மில்லி சோப்பு திரவம் கலந்து நல்ல வெயில் நேரத்தில், செடி முழுவதும், நனையும்படி கைதெளிப்பான் கொண்டு தெளித்து அழிக்கலாம்.
தரிசு நிலங்களில், அடர் ஆவாரை மற்றும் துத்தி வகை செடிகளை போட்டிச் செடிகளாக வளரச் செய்து, பார்த்தீனியத்தின் வளர்ச்சியை குறைக்கலாம். பார்த்தீனிய செடியை தின்று அழிக்கக்கூடிய மெக்சிகன் வண்டுகளை பரவச் செய்யலாம். இவ்வாறு, முகமது யாசின் பேசினார். வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணராஜன், கரியாம்பாளையம் ஊராட்சி தலைவர் கதிர்வேல், தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் ராஜஸ்ரீ, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுகந்தி, ஒன்றிய கவுன்சிலர் லட்சுமணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...