"நீரிழிவு' நோயால் இந்தியாவில் ஆறு கோடி பேர் பாதிப்பு

இந்தியாவில், ஆறு கோடி பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நீரிழிவை கட்டுப்படுத்தும் இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த, ப்ரெட்ரிக் பேன்டிங் மற்றும் சார்லஸ் பெஸ்ட் ஆகியோரது, பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இவர்களது
பிறந்த நாள், சர்வதேச, "நீரிழிவு தினம்' ஆக, அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் நீரிழிவு நோய் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள, அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும், 35 கோடி பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக, இந்தியாவில், ஆறு கோடி பேரும், சீனாவில், 4.5 கோடி பேரும், அமெரிக்காவில், மூன்று கோடி பேரும், ரஷ்யாவில், ஒரு கோடி பேரும், பிரேசில் நாட்டில், 75 லட்சம் பேரும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும், 2030ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை, இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நீரிழிவை கட்டுப்படுத்துவது குறித்த, விழிப்புணர்வு அவசியமாகிறது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு, இதய நோய், பார்வை இழப்பு, சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றுக்கு காரணமாகிறது. இவ்வாறு, உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...