சட்டப் பேரவையில் கேள்வி நேரம்: ஆங்கிலத்திலும் பதில்களை அளிக்க உத்தரவு

சட்டப் பேரவையில் கேள்வி நேரத்துக்காக உறுப்பினர்கள் தந்துள்ள கேள்விகளுக்கான பதில்களை தமிழுடன் ஆங்கிலத்திலும் தர வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைகளுக்கும் சட்டப் பேரவைச் செயலகம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது ஒவ்வொரு நாளும் காலை பேரவைத் தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெறும். நாளொன்றுக்கு 7 முதல் 10 கேள்விகள் எடுக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்னைகள் தொடர்பாக அந்தந்தத்
தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் கேள்விகளை கேட்பார்கள். அந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். பேரவை நாள்களிலும் தினமும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கேள்வி நேரம் நடைபெறுவது வழக்கம்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள் பேரவைச் செயலகத்திடம் கேள்விகளை அளிப்பார்கள். அந்தக் கேள்விகள் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசுத் துறைகளிடம் இருந்து அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் பெறப்படும். இந்த பதில்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கப்படும். பதில்களை தொடர்புடைய துறைகளின் அமைச்சர்கள் பேரவையில் தெரிவிப்பார்கள்.
விரிவான பதிலை எதிர்நோக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் அதற்கான பதில்களை அளிப்பார்கள்.
ஆங்கிலத்திலும் பதில்: அரசுத் துறைகளிடம் இருந்து பெறப்படும் பதில்கள் 100 நகல்கள் எடுக்கப்பட்டு ஆளுநரின் செயலகம் மற்றும் தொடர்புடைய அமைச்சரின் அலுவலகம், தலைமைச் செயலகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
தமிழில் பதில் தரும் வழக்கமான நடைமுறையுடன் இப்போது ஆங்கிலத்திலும் பதிலளிக்க அனைத்துத் துறைகளுக்கும் சட்டப் பேரவைச் செயலகம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் பதில்களையும் பிரதிகள் எடுத்து அனுப்பி வைக்க வேண்டுமென பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை தமிழில் மட்டுமே பதிலை அளித்து வந்த தலைமைச் செயலக ஊழியர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலக அதிகாரிகள் கூறியது:
ஒரு தொகுதியில் உள்ள திட்டமோ அல்லது பிரச்னை குறித்தோ அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பும்போது அதுகுறித்த நிலவரத்தை அந்தத் தொகுதி அடங்கியுள்ள மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்த பிறகே பதிலைத் தயார் செய்ய முடியும். இதற்கே சில வாரங்கள் பிடிக்கும். இந்தப் பதிலைப் பெற்ற பிறகு அதைத் தயார் செய்து உயரதிகாரிகளிடம் ஒப்புதல் வாங்குவதற்கு சில மாதங்கள் ஆகும். இந்த நிலையில், ஆங்கிலத்திலும் பதிலைத் தயார் செய்வது ஊழியர்களுக்கு சிரமத்தையும் காலதாமதத்தையும் ஏற்படுத்தும் என கருத்துத் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...