இறப்பு விகிதம்: நாட்டிலேயே தில்லியில் குறைவு அரசு கணக்கெடுப்பில் தகவல்


நாட்டில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தில்லியில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஒடிசாவில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
 மாதிரி பதிவு முறை (எஸ்.ஆர்.எஸ்) மூலம் இந்தியப் பதிவாளர் ஜெனரல் (ஆர்.ஜி.ஐ) அலுவலகம் எடுத்த கணக்கெடுப்பில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
 அதன்படி, தில்லியில் குறிப்பிட்ட கால கட்டத்தில், இறப்பு விகிதம் 10,000 பேருக்கு சராசரியாக 43 பேர்
என்ற விகிதம் உள்ளது. அந்த எண்ணிக்கை ஒடிசாவில் 85 பேர் எனவும், மகாராஷ்டிரத்தில் 63 பேராகவும் உள்ளது.
 தேசிய விகிதம்:
 நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 10,000 ஆண்களில் 78 பேர் இறக்கின்றனர். 10,000 பெண்களின் 63 பேர் இறக்கின்றனர்.
 நகர்ப்புறப் பகுதிகளை ஒப்பிடும்போது, கிராமப்புறப் பகுதிகளில் 10 ஆயிரத்தில் இருவர் கூடுதலாக இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்களின் இறப்பு விகிதம் கிராமப்புறங்களில் அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்ட கால கட்டத்தில், அங்கு ஆண்களில் 10,000 பேருக்கு 84 பேரும், பெண்களில் 10,000 பேருக்கு 73 பேரும் இறந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
 ஆண்கள் இறப்பு விகிதத்தில் அசாம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 10,000 பேரில் 89 பேர் இறக்கிறார்கள். தில்லியில் 10,000 ஆண்களில் 47 பேர் இறக்கிறார்கள்.
 அதிக காலம் வாழ்பவர்கள் பெண்களே: நாட்டில் 2008-ம் ஆண்டில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் 3 ஆண்டுகள் கூடுதலாக உயிர்வாழ்ந்தனர். அப்போது, பெண்களுக்கான ஆயுள்கால எதிர்பார்ப்பு 67.7 ஆண்டுகளாகவும், ஆண்களுக்கான ஆயுள்கால எதிர்பார்ப்பு 64.6 ஆண்டுகளாகவும் இருந்தது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 மேற்கு வங்கத்திலும், ராஜஸ்தானிலும் 2008-ம் ஆண்டில் ஆண்களைவிட பெண்கள் 3.6 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்தனர்.
 தமிழகத்தில் பெண்கள் 3.8 ஆண்டுகளும், பஞ்சாப் மாநிலத்தில் 4.2 ஆண்டுகளும், மகாராஷ்டிரத்தில் 4 ஆண்டுகளும், ஹரியாணாவில் 2.5 ஆண்டுகளும், குஜராத்தில் 4.1 ஆண்டுகளும், இமாசலப் பிரதேசத்தில் 4.7 ஆண்டுகளும், கர்நாடகத்தில் 4.8 ஆண்டுகளும், கேரளத்தில் 5.4 ஆண்டுகளும் பெண்களின் ஆயுள்காலம் அதிகமாக இருந்தது என்றும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...