அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள்: தேர்வு மையங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள் நடைபெறும் மையங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
விவசாயம் மற்றும் கைத்தறி நெசவுத் (கீழ்நிலை மற்றும் மேல்நிலை) தேர்வுகள் நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயம், கைத்தறி நெசவுத் தேர்வு (கீழ்நிலை மற்றும் மேல்நிலை) நவம்பர் 17ஆம்
தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்கான நுழைவுச் சீட்டை தேர்வு மையங்களில் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, மதுரை எம்.என்.யு.ஜெ.என். மேல்நிலைப் பள்ளி, காரைக்குடி எம்.வி. அரசு மேல்நிலைப் பள்ளி, கோவை கணபதி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளி, சேலம் சூரமங்கலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் மேல்நிலைப் பள்ளி, திருச்சி யு.டி.வி. மேல்நிலைப் பள்ளி, தஞ்சை சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, வேலூர் டான் போஸ்கோ உயர்நிலைப் பள்ளி, சிங்கபெருமாள்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னை அயனாவரம் கன்னட சங்க மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் விவசாயத் தேர்வு நடைபெறும்.
சேலம் வேம்படித்தளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கைத்தறி நெசவுத் தேர்வும், விருதாச்சலம் ஜங்சன் சாலை ஃபாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சென்னை எஸ்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் அச்சுக்கலைப் பிரிவு தேர்வும் நடைபெறும்.
தேர்வுச் சீட்டு பெறும் மையம்: தருமபுரி தேர்வு மையத்துக்கு விண்ணப்பித்தவர்கள் சேலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நுழைவுச் சீட்டை பெறலாம்.
திருவண்ணாமலை தேர்வு மையத்துக்கு விண்ணப்பித்தவர்கள் வேலூர் டான் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியிலும், புதுவை மற்றும் விழுப்புரம் தேர்வு மையத்துக்கு விண்ணப்பித்தவர்கள் கடலூர் நகராட்சிப் பள்ளியிலும் நுழைவுச் சீட்டை பெறலாம்.
கைத்தறி நெசவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் சேலம் வேம்படித்தளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுழைவுச் சீட்டு பெறலாம். மேலும், நுழைவுச் சீட்டு பெற்ற மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும். அச்சுக்கலைப் பிரிவு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் சென்னை மற்றும் விருதாச்சலம் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...