சுப்ரீம் கோர்ட்டில் இளநிலை நீதிமன்ற உதவியாளர்-

இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் டில்லியில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. இது 1950ல் நிறுவப்பட்டது. முதலில் இந்திய பார்லிமென்ட் அலுவலகத்தில் இயங்கி வந்த சுப்ரீம் கோர்ட் பின்னர் தற்போது உள்ள இடத்திற்கு மாற்றம் பெற்றது. இந்தியாவின் பெருமைமிக்க சுப்ரீம் கோர்ட்டில் இளநிலை நீதிமன்ற உதவியாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தகுதிகள்: சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.12.2012 அன்று
18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஆங்கில டைப்ரைட்டிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளை கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் இருக்க வேண்டும். அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வு, டைப்ரைட்டிங் திறனறியும் தேர்வு, அப்ஜெக்டிவ் வகையிலான கம்ப்யூட்டர் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற வேண்டும்.
மற்றவை: சுப்ரீம் கோர்ட்டில் மேற்கண்ட உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை ஐகோர்ட்டிலிருந்து பெற வேண்டும். இதற்கு ரூ.300/க்கான டி.டி.,யை The Registrar, Supreme Court of India என்ற பெயரில் டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 21.12.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி
Registrar,
Supreme Court of India,
Tilak Marg,
New Delhi 110 001.
Âsn¨£[PÒ QøhUP CÖv |õÒ : 21.12.2012
Cøn¯uÍ •PÁ› : http://supremecourtofindia.nic.in/recruitment.htm

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...