இடைநிற்றல் குழந்தைகளுக்காக அவிநாசியில் உறைவிடப் பள்ளி


ஏழ்மை காரணமாக பள்ளி செல்லாமல் இடைநிற்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக, அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
 அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் சார்பில், ஏழ்மை காரணமாக பள்ளி செல்லாமல் இடைநிற்கும்

ஆதரவற்ற குழந்தைகளுக்காக, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டத்தின் கீழ், உண்டு உறைவிடப் பள்ளி ரூ. 36.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது.
 இதன் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதம்நந்தினி ஜெகதீசன், அவிநாசி பேரூராட்சித் தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
 பள்ளித் தலைமை ஆசிரியர் சரவணபவன், பேரூராட்சி துணைத் தலைவர் எம்.எஸ். மூர்த்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் க.பழனிசாமி, அவிநாசி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அ.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி கட்டடப் பணியைத் துவக்கி வைத்தார். ரவுண்ட் டேபிள்-116 அமைப்பின் தலைவர் அஜய்குமார், திட்ட இயக்குநர் மணிஷ், செயலாளர் மனோஜ் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...