"மாஜி' ஊழியருக்கு பென்ஷன் வங்கிக்கு ஐகோர்ட் உத்தரவு

:உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், 56 வயதான, முன்னாள் ஊழியருக்கு, பென்ஷன் வழங்கும்படி, பாரத ஸ்டேட் வங்கிக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பெங்களூருவில், பாரத ஸ்டேட் வங்கி கிளையில், பிரமிளா கிருபா ஆகஸ்டஸ் என்பவர் பணியாற்றினார். 1981ம் ஆண்டு, சென்னைக்கு மாற்றப்பட்டார். தனிப்பட்ட
காரணங்களுக்காக, விடுமுறையில் சென்றார். இதையடுத்து, தானாக முன்வந்து ஓய்வு பெற்று விட்டதாக, 1999ம் ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கி, உத்தரவு பிறப்பித்தது. பிரமிளாவுக்கு வர வேண்டிய, பணிக்கொடை, பி.எப்., தொகை வழங்கப்பட்டது.
பென்ஷன் தொகை வழங்க, வங்கி நிர்வாகம் மறுத்து விட்டது. இதையடுத்து, பென்ஷன் வழங்க உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டில், பிரமிளா மனுத் தாக்கல் செய்தார். வங்கி தரப்பில், "12 ஆண்டுகள் கழித்து, இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணியை விட்டு விட்டு, பிரமிளா சென்று விட்டார். எனவே, பென்ஷன் சலுகை கோர முடியாது' என, கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் மீது, விருப்ப ஓய்வு திணிக்கப்பட்டுள்ளது. பணியை விட்டு விட்டு சென்று விட்டதாக, வங்கி தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. 2003ம் ஆண்டு முதல், பென்ஷன் கேட்டு, மனுக்கள் அனுப்பி வருகிறார். அதற்கு, வங்கி தரப்பில் பதிலளிக்கவில்லை. பிரமிளாவின் கணவர், இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அவரது தந்தை, இடுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.மனுதாரரும், 2008ம் ஆண்டு முதல், உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். எனவே, அவரால் உடனடியாக, கோர்ட்டை அணுக முடியவில்லை. பென்ஷன் பெற, மனுதாரருக்கு உரிமையுள்ளது. மனுத் தாக்கல் செய்த, 2011ம் ஆண்டு, ஜனவரியில் இருந்து, ஒன்பது சதவீத வட்டியுடன், பென்ஷன் பாக்கி பெற உரிமையுள்ளது. தொடர்ந்து பென்ஷன் வழங்க வேண்டும்.இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...