விடுமுறைகளால் பாடவேளைகளை இழந்த ஆசிரியர்கள் அவதி

கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழையினால் அதிக நாள்கள் விடுமுறை விடப்பட்டதால் பாட வேளைகளை ஆசிரியர்கள் இழந்து, குறிப்பிட்ட காலத்தில் அரையாண்டுத் தேர்வு பாடங்களை நடத்த முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது விரைந்து பாடங்களை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு
நடப்பு கல்வியாண்டின் அரையாண்டு பொதுத் தேர்வுகள் டிசம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதற்கான அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணை அறிவிப்பை ஜ்ஜ்ஜ்.ந்ஹப்ஸ்ண்ள்ர்ப்ஹண். ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மொழிப்பாடத் தேர்வுகள் டிசம்பர் 19 முதல் 22 வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்புக்கு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் முறையே ஜனவரி 2, 4, 7 தேதிகளில் நடைபெறவுள்ளது.
12-ம் வகுப்பிற்கு முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜனவரி 2-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் கடை வாரம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகளை முன்னிட்டு தேர்வுகள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் காலை 10 மணி முதல் 10 நிமிடங்கள் வினாத்தாள் படிப்பதற்கும், 5 நிமிடங்கள் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்வதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் புயல் மற்றும் கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்டு பல பாடவேளைகளை ஆசிரியர்கள் இழந்துள்ளனர்.  இதனால் குறித்த காலத்தில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி முடிக்காத நிலையில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தேர்வு தொடக்கம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் 19 வேலை நாள்களில் அக்டோபர் 3, 22, 29, 30, 31 ஆகிய 5 தினங்கள் கனமழை மற்றும் அரசு தேர்வாணைய தேர்வுக்காக விடுமுறை விடப்பட்டுள்ளது. ÷நவம்பர் மாதத்தில் 1-ம் தேதி கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்டது. டிசம்பர் மாதத்தில் 18-ம் தேதி வரை, 14 நாள்கள் வேலைநாட்கள் மட்டுமே. ஆக மொத்தம் 43 நாள்களில் அரையாண்டுத் தேர்வுக்கான பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...