மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு கண்காட்சி தொடக்கம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு கண்காட்சியை திங்கள்கிழமை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் மருத்துவமனை முதல்வர் டாக்டர் வி.கனகசபை. உடன், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய இயக்குநர் டாக்டர் சி.ரமேஷ். 
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு கண்காட்சி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி ஒருவாரம் நடைபெறுகிறது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனால், மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படும் சிசிச்சைகள் குறித்து பொது மக்கள் அறிந்து கொள்வதற்கும், சிகிச்சைக்கான வழிமுறைகளை தெரிவிப்பதற்கும் சிறப்புக் கண்காட்சி
நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியை மருத்துவமனை முதல்வர் டாக்டர் வி. கனகசபை தொடங்கி வைத்தார். இதில் செயற்கை கை, கால்கள், ஊன்று கோல்கள் போன்றவற்றின் மாதிரிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சி குறித்து டாக்டர் வி.கனகசபை கூறியது: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதும் கண்காட்சி நடத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிகிச்சை குறித்து பொதுமக்கள் பலருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் அவர்.   மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய இயக்குநர் டாக்டர் சி.ரமேஷ் கூறியது: இந்தியாவிலே செயற்கை கை, கால்கள் பொருத்தும் பெரிய நிலையமாக இந்த மறுவாழ்வு மையம் செயல்படுகிறது. மிகவும் சிக்கலான மருத்துவப் பிரச்னை உடையவர்களுக்கு இங்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இயன்முறைப் பயிற்சி, செயல்முறைப் பயிற்சி, மனச்சோர்வு நீக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. மேலும், கே.கே.நகர் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் நவம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது என்றார் அவர்.
இந்தக் கண்காட்சியை மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...